
ஃபிஃபாவின் கண்டனங்களுக்கு இடையிலான கால்பந்து போட்டியில் ரியல்மாட்ரிட் அணியினர் சாம்பியன் பட்டத்தை வென்றனர்.
லுசாய்ல் அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் ரியல்மாட்ரிட் அணியினர் மெக்சிகோவின் பச்சுகா அணியை சந்தித்து விளையாடினர்.
இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய ரியல்மாட்ரிட் அணியினர் 3-0 என்ற கோல் கணக்கில் பச்சுகா அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.
ரியல்மாட்ரிட் அணியின் வெற்றி கோல்களை கிளையன் எம்பாப்பே, ரோட்ரிகோ, வினிசியஸ் ஜூனியர் ஆகியோர் அடித்தனர்.
இந்த வெற்றியை தொடர்ந்து ரியல்மாட்ரிட் அணியினர் பிபாவின் கண்டங்களுக்கு இடையிலான கால்பந்து போட்டியின் சாம்பியன் பட்டத்தை வென்றனர்.