27.3 C
Kuala Lumpur
Tuesday, April 21, 2026

Vetri

கோலாலம்பூரில் குடிநுழைவுத்துறை நடவடிக்கையில் 57 வெளிநாட்டுப் பெண்கள் கைது

கோலாலம்பூர் Jalan Metro Perdana Baratடில் உள்ள பொழுதுபோக்கு விடுதி ஒன்றில் திடீர் சொதனை நடத்திய குடிநுழைவுத்துறை அதிகாரிகள் சமையல் அறையில் ஒளிந்துகொண்டிருந்த GRO எனப்படும் உபசரிப்பு பணியாளர்களாக வேலை செய்து வந்த 57 வெளிநாட்டுப் பெண்களை கைது செய்தனர்.

இவர்களில் பலர் தங்களது கணவர்கள் உள்நாட்டைச் சேர்ந்தவர்கள் என்று கூறிக்கொண்டபோதிலும் குடிநுழைவு அதிகாரிகளை ஏமாற்றுவதற்காக அவர்கள் கையாண்ட வியூகம் அது என கண்டறியப்பட்டது .

இரவு 11.30 மணியளவில் மேற்கொள்ளப்பட்ட OPS Gegar நடவடிக்கையில் அவர்கள் கைது செய்யப்பட்டனர்

அந்த வெளிநாட்டு பெண்கள் கூறிக்கொண்டதுபோல் உள்நாட்டைச் சேர்ந்த அவர்களது கணவர்கள் யாரும் அந்த பொழுதுபோக்கு விடுதியில் கண்டுப்பிடிக்கவில்லை என மலேசிய குடிநுழைவுத்துறையின் இயக்குனர் வான் முகமட் சவ்பி வான் யூசோப் (Wan Mohammed Saupee Wan Yusoff ) தெரிவித்தார்.

இந்த சோதனை நடவடிக்கையில் மொத்தம் 70 சட்டவிரோத குடியேறிகள் கைது செய்யப்பட்டதாகவும் அவர்களில் 57 பெண்கள் மற்றும் 10 ஆண்களும் அடங்குவர் என அவர் கூறினார்.

அவர்களது முதலாளிகள் என நம்பப்படும் உள்நாட்டைச் சேர்ந்த இதர மூவரும் கைது செய்யப்பட்டனர் . கைது செய்யப்பட்ட வெளிநாட்டுப் பெண்களில் 46 பேர் தாய்லாந்தைச் சேர்ந்தவர்களாவர். இதுதவிர 8 வங்காளதேச ஆடவர்களும் கைது செய்யப்பட்டனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles