
கடந்த 30 வருடங்களுக்கும் மேலாக செஸ் விளையாட்டின் நடுவராக இருந்து வருகிறார் தலைமை நடுவரான அப்துல் ஹமீத் அப்துல் மஜீத். அவர் ஒரு மலேசியர் மட்டுமல்ல, தமிழ் முஸ்லிம்.
உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் தனது நிறைவான நடுவர் பணியைச் செவ்வனே ஆற்றி வருகிறார்.
இந்த துறையில் நேர்மைத்தன்மையும் நிபுணத்துவத்தையும் முதன்மை இலக்காக கொண்டு செயல்படுபவர் அப்துல் ஹமீத் அப்துல் மஜீத்.
உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டிக்கு நடுவராக தகுதிப் பெற்ற முதல் மலேசியராகத் திகழ்கிறார்.
ஆரம்ப காலகட்டத்தில் மலேசியா- சிங்கப்பூர் CHALLENGE விளையாட்டு தொடரில் நடுவராக இருந்தார்
1992ஆம் ஆண்டு தேசிய செஸ் விளையாட்டாளராக இருந்த அவர் தலைமை நடுவராக தற்போது வலம் வருவது செஸ் உலகிற்கே பெருமை சேர்த்துள்ளார்
நடுவராக வருவதற்கு முதலில் விளையாட்டின் அடிப்படை நுணுக்கங்களையும் தகவல்களையும் நடுவர் என்ற முறையில் முழுமையாக தெரிந்திருக்க வேண்டும்.
அப்போதுதான் நேர்மையான வெளிப்படையான யாருக்கும் சார்பில்லா முடிவுகளை நாம் ஒரு நடுவராக வழங்க முடியும் என்று அவர் கூறுகிறார்.
சமீபத்தில் சிங்கப்பூரில் நடைபெற்ற உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியின் தலைமை நடுவராக அப்துல் ஹமீத் அப்துல் மஜீத் செயல்பட்டார். அதில் தமிழகத்தைச் சேர்ந்த குகேஷ் வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.