29.4 C
Kuala Lumpur
Tuesday, April 21, 2026

Vetri

கடந்த 6 ஆண்டுகளில் லோரி விபத்தில் 1,457 பேர் உயிரிழந்துள்ளனர்!

கடந்த 6 ஆண்டுகளில் நிகழ்ந்துள்ள லோரி விபத்தில் கிட்டத்தட்ட 1,457 பேர் உயிரிழந்துள்ளனர்.

புக்கிட் அமான் போக்குவரத்து புலனாய்வு, அமலாக்கத் துறையின் இயக்குநர் முஹம்மத் யுஸ்ரி ஹசன் பஸ்ரி தெரிவித்தார்.

கடந்த ஜனவரி 2019 முதல் கடந்த மாதம் வரை நாடு முழுவதும் லாரிகள் சம்பந்தப்பட்ட 3,500 விபத்துகள் நிகழ்ந்துள்ளது.

இதில் மொத்தம் 1,457 இறப்புகள் பதிவாகியுள்ளன.

2019 ஆம் ஆண்டில் அதிகபட்சமாக 274 இறப்புகள் பதிவாகியுள்ளன.

அதைத் தொடர்ந்து இந்த ஆண்டு 260 இறப்புகள், 2023 (235 இறப்புகள்), 2022 (232 இறப்புகள்), 2021 (230 இறப்புகள்), 2020 (226 இறப்புகள்) பதிவாகியுள்ளன.

அதே நேரத்தில் 473 பேர் கடுமையான காயங்களுக்கு இலக்காகினர். இந்த காலகட்டத்தில் 1,076 சிறு காயங்கள் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

பேருந்துகள் சம்பந்தப்பட்ட விபத்துகளைப் பொறுத்தவரை, அதே காலகட்டத்தில் 548 சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன, 

இதில் 153 இறப்புகள், 120 கடுமையான காயங்கள், 218 சிறிய காயங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்று அவர் கூறினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles