28 C
Kuala Lumpur
Sunday, June 28, 2026

Vetri

இப்போது திருடுவது நம் முறை என்று படாவியின் மகன் என் மகனிடம் சொன்னார்!

🔥 Views : 13
👁 Reading Now : 43

இப்போது திருடுவது நம் முறை என்று முன்னாள் பிரதமர் துன் அப்துல்லா படாவியின் மகன் என் மகனிடம் சொன்னார்.

இது தொடர்பான இருவரின் உரையாடலை முன்னாள் பிரதமர் துன் மகாதீர் இன்று வெளிப்படுத்தினார்.

நாட்டின் ஐந்தாவது பிரதமரின் மகன் தனது தந்தையின் பதவியைப் பயன்படுத்தி செல்வத்தை குவிக்கும் நோக்கத்தை கொண்டுள்ளார்.

குறிப்பாக எந்தப் பெயர்களையும் குறிப்பிடாமல், முன்னாள் பிரதமர் இந்த தகவல் வெளிப்பாட்டால் அதிர்ச்சியடைந்ததாக ஒப்புக்கொண்டார்.

நான் பிரதமராக இருந்தபோது, ​​அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து ஊழல் செய்தேன் என்று பலர் நம்புகிறார்கள்.

அப்துல்லா படாவியின் மகன் என் மகனிடம்,  முன்பு உன் முறை, இப்போது நம் முறை என்றான். 

பணத்தை திருடுவது தான் அதன் நோக்கமாக இருந்தது. இது எனக்கு பெரும் அதிர்ச்சியாக இருந்தது.

இவர்கள் பிரதமரின் பதவியை கொண்டு நாட்டை வழிநடத்தி மேம்படுத்துவதற்குப் பதிலாக, செல்வத்தை குவிப்பதற்கான வாய்ப்பாகக் கருதியதற்காக துன் மகாதிர் வருத்தம் தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles