30.2 C
Kuala Lumpur
Thursday, July 10, 2025

Vetri

துபாய் கார் பந்தய போட்டி 2025! 992 பிரிவில் அஜித்குமாரின் கிளப் 3ஆவது இடத்தை பெற்றது!

துபாய், ஜன 12-
துபாயில் நடைபெற்ற மெச்சிலின்
24 மணிநேர கார் பந்தயத்தில் பங்கேற்ற நடிகர் அஜித்தின் அணி, 992 ஆவது பிரிவில் 3 ஆம் இடத்தை பிடித்து சாதனை படைத்தது.

பந்தயத்தில் புதிதாக களமிறங்கிய அஜித் குமார் ரேசிங் கிளர்ப் இச்சாதனையை படைத்தது ரசிகர்களில் மத்தியில் பெறும் வரவேற்பை பெற்றுள்ளது.

தமிழ் திரையுலகில் முன்னணி நட்சத்திரமாக உள்ள அஜித் குமார் துபாயில் நடைபெற்ற 24 மணி நேர கார் பந்தையத்தில் தனது அணியுடன் பங்கேற்றார். 4 பேர் கொண்ட இந்த அணியில் நடிகர் அஜித்துடன் சேர்த்து ஃபேபியன், டெட்ரி மற்றும் கேமி ஆகியோர் போட்டியில் பங்கேற்றனர்.

நேற்று மதியம் 1.30 மணியளவில் கார் பந்தையம் தொடங்கிய நிலையில், அஜித் ரசிகர்கள் ஏராளமானோர் அங்கு திரண்டு ஆதரவு தெரிவித்ததால் அரங்கம் களைகட்டியது.

இந்நிலையில், 24 மணி நேர கார் பந்தயம் முடிவடைந்த நிலையில், 992-வது பிரிவில் நடிகர் அஜித்தின் அணி 3 ஆம் இடம் பிடித்தது. அத்துடன் GT4 பிரிவில் அஜித்தின் அணிக்கு ‘SPIRIT OF THE RACE’ என்ற விருதும் வழங்கப்பட்டது.

பரிசளிப்பு மேடையில் வெற்றி மகிழ்ச்சியை கொண்டாடும் வகையில் இந்தியாவின் தேசியக்கொடியை ஏந்திக்கொண்டு தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார் அஜித் குமார்.

இதனிடியே இந்த மெச்சிலின் 24எச் டுபாய் 2025 போட்டியில் பிஎம்டபிள்யூ மற்றும் டீம் WRT உடன் போட்டியிட்டு, 24 வயதான டோன் ஹார்பர் வெற்றி பெற்றுள்ளார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles