30.3 C
Kuala Lumpur
Friday, June 26, 2026

Vetri

அனுபவம், நிபுணத்துவம் காரணமாக ஹுஸ்னிக்கு பதிலாக  ஜொஹாரி முதன்மை தேர்வாக இருந்தார்: நஜிப்

🔥 Views : 11
👁 Reading Now : 68

அனுபவம், நிபுணத்துவம் காரணமாக ஹுஸ்னிக்கு பதிலாக ஜொஹாரி முதன்மை தேர்வாக இருந்தார்.

1 எம்டிபி வழக்கில் குற்றச்சாட்டுகளுக்கு எதிராக தன்னைத் தானே தற்காத்துக் கொள்ளும் முன்னாள் பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் இதனை கூறினார்.

கடந்த 2016ஆம் ஆண்டில் அப்போதைய  இரண்டாவது நிதியமைச்சர் டத்தோஸ்ரீ அஹ்மத் ஹுஸ்னியை முடக்க முயன்றதாக கூறப்பட்ட குற்றச்சாட்டை அவர் மறுத்தார்.

மேலும் அதற்கு பதிலாக முதலீட்டு நிறுவனத்தின் கடன் பிரச்சினைகளைத் தீர்க்க உதவும் வகையில் டத்தோஸ்ரீ ஜொஹாரி அப்துல் கானி அந்தப் பதவியை ஏற்க வேண்டும் என தாம் விரும்பியதாக அவர் கூறினார்.

தற்போது தோட்டத்துறை அமைச்சராக இருக்கும் ஜொஹாரி, 

ஒரு வர்த்தக நிபுணராக ஒரு விரிவான அனுபவத்தை  அவர் கொண்டிருந்தார்.

என்னை பொறுத்த வரையில் அஹ்மத் ஹுஸ்னி நீண்ட காலமாக ஒரே இலாகாவில் இருந்தார்.

எல்லா நேரங்களிலும் ஒரே அமைச்சில் இருப்பது தனது உரிமை என்று மக்கள் நினைப்பதை நான் விரும்பவில்லை.

இதை அடிப்படையில் தான் இம்மாற்றத்தை தாம் விரும்பியதாக நஜிப் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles