29.4 C
Kuala Lumpur
Friday, June 26, 2026

Vetri

கேஎல்ஐஏவில் 61.3 கிலோ போதைப்பொருள் கடத்தல் முறியடிப்பு; பிரிட்டன் ஆடவர் உட்பட மூவர் கைது: ஹுசைன் ஒமார் கான்

🔥 Views : 6
👁 Reading Now : 56

ஷாஆலாம்: 

கேஎல்ஐஏ விமான நிலையம் 1, 2இல் மேற்கொள்ளப்பட்ட 61.3 கிலோ போதைப்பொருள் கடத்தலை போலிசார் முறியடித்துள்ளனர்.

சிலாங்கூர் மாநில போலிஸ் தலைவர் டத்தோ ஹுசைன் உமர் கான் இதனை கூறினார்.

சம்பந்தப்பட்ட விமான நிலையங்களில் தனித் தனியாக கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.

கைதானவர்களிடம் இருந்து 61.3 கிலோ கிராம் சியாபு, கஞ்சா வகை போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

இவற்றின் மொத்த மதிப்பு 1.06 மில்லியன் ரிங்கிடாகும்.

கடந்த ஜனவரி 22, 24ஆம் தேதிகளில் மேற்கொள்ளப்பட்ட கைது நடவடிக்கைகளில் பிரிட்டன் ஆடவர் உட்பட மூவரை போலிசார் கைது செய்துள்ளனர்.

முதல் சம்பவத்தில் கைதான ஈறூஆற் சரவாக்கை சேர்ந்தவர்களாவர்.

இவர்கள் தீபகற்ப மலேசியாவுக்கு வந்ததுடன் சரவாக்கிற்கு இந்த போதைப் பொருளை கொண்டு செல்ல முயற்சித்துள்ளனர்.

சரவாக்கில் விநியோகம் செய்வதற்காக இப்போதைப் பொருட்களை அவர்கள் கொண்டு செல்ல முயற்சித்துள்ளனர்.

இதற்கு அவர்களுக்கு ஒவ்வொரு கிலோவிற்கும் 600 ரிங்கிட் ஊதியம் வழங்கப்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.

இரண்டாவது சம்பவத்தில் கைதான பிரிட்டன் ஆடவர், இங்கிருந்து போதைப் பொருளை கடத்தி செல்ல முயற்சித்த போது கைது செய்யப்பட்டார் என்று டத்தோ ஹுசைன் ஒமான் கான் கூறினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles