28.5 C
Kuala Lumpur
Saturday, June 6, 2026

Vetri

எழுத்தாளர்களாக உருவாகி இருக்கும்தமிழ்ப்பள்ளி ஆசிரியர்களை கெளரவித்து பாராட்டினார் குயில் ஜெயபக்தி உரிமையாளர் டத்தோ டாக்டர் கு செல்வராஜ்!

🔥 Views : 8
👁 Reading Now : 51

கோலாலம்பூர் பிப் 1-
தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள் இன்று எழுத்தாளர்களாக உருவாகி இருப்பது பெரும் மகிழ்ச்சியை அளிக்கிறது என்று குயில் ஜெயபக்தி நிறுவனத்தின் உரிமையாளர் டத்தோ டாக்டர் கு செல்வராஜ் தெரிவித்தார்.

மலேசிய தமிழ் எழுத்து துறையில் புதிய எழுத்தாளர்கள் உருவாக வேண்டும்.

அந்த வகையில் புதிய எழுத்தாளர்களாக உருவாகி இருக்கும் தமிழ்ப் பள்ளி ஆசிரியர்கள் இன்று கெளரவிக்கப் பட்டனர்.

குயில் ஜெயபக்தி மண்டபத்தில் இன்று காலையில் நடைபெற்ற விழாவில் டத்தோ டாக்டர் கு. செல்வராஜ் எழுத்தாளர்கள் பாராட்டி சிறப்பு செய்தார்.

சுமார் 50க்கும் மேற்பட்ட புதிய எழுத்தாளர்களின் படைப்புகள் புத்தக வடிவில் உருவாகி உள்ளது.

இந்த விழாவில்
மலேசிய தமிழ்ப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மன்றத்தின் தலைவர் எஸ்.எஸ். பாண்டியன்,
கிள்ளான் மாவட்ட தமிழ்ப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மன்றத்தின் தலைவர் தமிழ் அரசு சுப்ரமணியம் ,
சுங்கை பூலோ தமிழ்ப் பள்ளி தலைமை ஆசிரியர் திருமதி மகேஸ்வரி மற்றும்
கிள்ளான் மாவட்ட ரோட்டரி கிளப் பொறுப்பாளர் சரத் ஆகியோரை குயில் ஜெயபக்தி நிறுவனத்தின் உரிமையாளர் டத்தோ டாக்டர் கு செல்வராஜ் சிறப்பு செய்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles