28.5 C
Kuala Lumpur
Saturday, June 6, 2026

Vetri

ஸ்ரீ முருகன் கல்வி நிலையத்தில் ஏற்பாட்டில் கல்வி ஜீவன்!

🔥 Views : 11
👁 Reading Now : 70

ஸ்ரீ முருகன் கல்வி நிலையத்தின் பயிலும் மாணவன் ஒரு தலைவனாக இருக்க வேண்டும் அவனுக்கு எல்லா வகையிலும் எங்கள் கல்வி நிலையம் பக்க பலமாக இருக்கும் அவனுக்கு ஓய்வு இல்லை படித்துக் கொண்டே இருக்க வேண்டும் என்று கல்விநிலைய இயக்குனர் சுரேன் கந்தா கூறினார். ஸ்ரீ முருகன் கல்வி நிலையத்தில் கல்வி ஜீவன் நிகழ்வு நேற்று நடைபெற்றது. கிட்டத்தட்ட 100 மாணவர்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

2025ஆம் ஆண்டு கல்வி ஆண்டை மாணவர்கள் வெற்றிகரமாக தொடங்க வேண்டும் என்பதுதான் இந்நிகழ்வின் முக்கிய நோக்கமாகும்.

அதே வேளையில் ஸ்ரீ முருகன் நிலையத்தின் பிரத்தியேக வகுப்புகள் வரும் பிப்ரவரி 16ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக தொடங்கவுள்ளது.

கிள்ளான் பள்ளத்தாக்கில் மட்டும் பிரிக்பீல்ட்ஸ், காஜாங், ஷாஆலம், கோலகுபுபாரு ஆகிய இடங்களில் பிரத்தியேக வகுப்புகள் நடத்தப்படவுள்ளது.

இதை தவிர்த்து நாடு முழுவதும் பல இடங்களில் ஸ்ரீ முருகன் கல்வி நிலையத்தின் பிரத்தியேக வகுப்புகள் நடைபெறவுள்ளது.

ஏட்டுக் கல்வியுடன் தொழில் திறன் பயிற்சிகள், ஸ்டேம் கல்வி உட்பட பல்வேறு திட்டங்களை ஸ்ரீ முருகன் கல்வி நிலையம் முன்னெடுக்கவுள்ளது.

இவை அனைத்தும் நமது மாணவர்களை சாதனையாளர்களாக உருவாக்க வேண்டும் என்பதே எங்களின் இலக்கு.

அதே வேளையில் இந்த சாதனையாளர்கள் ஒரு சிறந்த தலைவர்களாக வேண்டும்.

இதன் அடிப்படையில் ஸ்ரீ முருகன் கல்வி நிலையம் செயல்பட உள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles