25.6 C
Kuala Lumpur
Sunday, September 27, 2026

Vetri

பத்துமலை தைப்பூசத்திற்காக இலவச கேடிஎம் ரயில் சேவை – செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் குணராஜ் பாராட்டு!

🔥 Views : 23
👁 Reading Now : 38

தைப்பூசத்தை முன்னிட்டு, பிப்ரவரி 10 மற்றும் 11, 2025 அன்று கிளாங் பள்ளத்தாக்கிற்கு இலவச KTM ரயில் சேவையை வழங்கியதற்காக மாண்புமிகு போக்குவரத்து அமைச்சர் ஒய்.பி. அந்தோணி லோக் மற்றும் கெரெட்டாபி தனா மெலாயு பெர்ஹாட் (KTMB) ஆகியோருக்கு தைப்பூசப் பணிக்குழுவின் சார்பாக தனது நன்றியையும் பாராட்டுகையும் அதன் தலைவரும் செந்தோசா சட்டமன்ற உறுப்பினருமான மாண்புமிகு டாக்டர் குணராஜ் ஜோர்ஜ் தெரிவித்துக்கொண்டார் பத்துமலை மற்றும் மற்ற கோயில்களுக்கு செல்லும் பக்தர்கலின் யணத்தை எளிதாக்க இந்த முயற்சி ஒரு முக்கியமான படியாகும். இது தைப்பூசத்திற்காக திரளாக கூடியுள்ள பக்தர்கள் பாதுகாப்பாகவும் சுமூகமாகவும் பயணிக்க உதவும். ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்க உள்ளதை கருத்தில் கொண்டு, இலவச KTM ரயில் சேவையை முழுமையாக பயன்படுத்துமாறு நாங்கள் அனைவரையும் உற்சாகமாக ஊக்குவிக்கிறோம். இது போக்குவரத்து நெரிசலை குறைப்பதோடு மட்டுமல்லாமல், அனைவருக்கும் வசதியான பயண அனுபவத்தையும் வழங்கும். பொது போக்குவரத்தை பயன்படுத்துவது பார்க்கிங் சிக்கல்களை குறைக்கும், போக்குவரத்து நெரிசலால் நேரம் வீணாகாது, மேலும் பக்தர்கள் தங்கள் ஆன்மீகச் செயல்பாடுகளில் முழுமையாக கவனம் செலுத்தும் வாய்ப்பை வழங்கும். எனவே இந்த இலவச KTM ரயில் சேவையை முதன்மை போக்குவரத்து முறையாக பயன்படுத்துமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கிறோம் என செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் குணராஜ் கேட்டுக்கொண்டார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles