32.5 C
Kuala Lumpur
Friday, May 1, 2026

Vetri

மாறுப்பட்ட கோணத்தில் அஜித்தின் விடாமுயற்சி திரைப்படம்!முதல் நாள் முதல் காட்சிக்கு திரண்ட ரசிகர்கள்!

கோலாலம்பூர்,பிப்.6-
நடிகர் பத்மபூஷண் அஜித்குமார் நடித்த விடாமுயற்சி திரைப்படம் உலக முழுவதிலும் இன்று வெளியீடு கண்டுள்ளது.

ஷா ஆலம், திஎஸ்ஆர் திரையரங்கில் அத்திரைப்படத்தில் முதல் நாள் முதல் காட்சியை மலேசிய அஜித் நற்பணி மன்றம் ஏற்பாடு செய்திருந்தது. கடந்த ஈராண்டு காலமாக நடிகர் அஜித்குமாரை திரையில் காணமல் காத்திருந்த ரசிகர் இங்கு பெரும் அளவில் திரண்டனர்.

காலை 6 மணி முதல் பட்டாசுகள் வெடித்து பெரும் கொண்டாட்டத்தில் ரசிகர்கள் ஈடுபட்டனர்.

திரைப்பட கலைஞர்களின் ரசிகர்கள் அவர்களுக்கு பிடித்த கதாநாயகர்களின் திரைப்படங்களை முன்னிட்டு முதல் காட்சிகளை ஏற்பாடு செய்து அதனை கொண்டாடுவதை தான் வரவேற்பதாக மலேசிய அஜித் நற்பணி மன்றத்தின் தலைவர் டேவ் என்ற தேவேந்திரன் வரவேற்பதாக கூறினார்.

இதுபோன்ற கொண்டாங்கள் குறித்து சிலர் சமூக வலைத்தளங்களில் தப்பான கருதுகளை பதி செய்கின்றனர். அதனை தான் பொருட்படுத்தபோவதில்லை என்றும் ரசிகர்கள் இதுபோன்ற கொண்டாடங்களில் ஈடுபடுவது தவறில்லை. அவர்களுக்கு பிடித்த கதாநயன்களின் திரைப்படத்தை வரவேற்கும் குதுகலத்தில் ஈடுபடுவதில்லை தவறொன்றும் இல்லை என அவர் சொன்னார்.

மாறுப்பட்ட கோணத்தில் விடாமுயற்சி திரைப்படத்தை இயக்குநர் மகிழ் திருமேனி தயாரித்துள்ளார். நடிகர் அஜித்குமார், அர்ஜூன், திரிஷா, ஆரவ் ஆகியோர் இத்திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடத்துள்ளனர். இசையமைப்பாளர் அனிருத்தின் தரமான இசை திரைப்படத்திற்கு மேலும் பலத்தை சேர்த்துள்ளது.

ஈராண்டு காலமாக நடிகர் அஜித்குமாரை திரையில் காண காத்திருந்த ரசிகர்களுக்கு இத்திரைப்படம் சமர்ப்பணம் என்றுதான் கூற வேண்டும்.

நடிகர் அஜித்குமார் அதிரடி ஆக்‌ஷன் நடிப்பு இல்லாமல் இயல்பான கதாபாத்திரைத்தை அவர் ஏற்று நடித்துள்ளார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles