
பத்துமலை கோவிலுக்கு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வர் இப்ராஹிம் வழங்கிய ஒரு மில்லியன் நன்கொடை இந்திய சமூகத்திற்கான ஒற்றுமை அரசாங்கத்தின் உறுதியான அர்ப்பணிப்பையும் நிலைப்பாட்டையும் காட்டுகின்றது என்று செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் குணராஜ் தெரிவித்தார் . அவர் வெளியிட்ட அறிக்கையில், டிஜிட்டல் துறை அமைச்சர் கோபிந்த் சிங் மற்றும் டான்ஸ்ரீ நடராஜாவின் முயற்சிகளினால் இந்த நிதி உதவி சாத்தியமாதியாக கூறினார். மேலும் அவர் கூறியதாவது இந்த பத்துமலை கோயில் வழிபாட்டுத்தலமாக மட்டுமல்லாது நாட்டின் அனைத்து இந்துக்களுக்கும் ஆன்மீக மற்றும் பண்பாட்டு அடையாளமாக விளங்குகிறது. அதேபோல் சர்வதேச சுற்றுப் பயணிகளின் கவனத்தை விற்கும் ஒரு முக்கிய தளமாக பத்துமலை விளங்கி வருகின்றது. தைப்பூசம் பனிக்குழுவின் தலைவராக உள்ள குணராஜ் இந்த நிதி உதவி கோவிலின் பராமரிப்பு சமூக சேவைகள் மற்றும் கல்வி ஆன்மீக நடவடிகளுக்கு பெரும் பயனளிக்கும் எனக் கூறினார். அதேசமயம் சிலாங்கூர் பிகேஆர் துணைத் தலைவர் என்ற வகையில் பிரதமர் அன்வாரின் தலைமையில் ஒற்றுமை அரசு அனைவரின் நலனுக்கும் நம்பிக்கையுடன் செயல்படுவதை வெளிப்படுத்தி உள்ளது என்றும் குறிப்பிட்டார். கோவிலுக்கு வழங்கிய நிதி உதவி மட்டுமல்லாது இந்திய சமூகம் முன்னேற்றத்திற்கான கல்வி பொருளாதார மேம்பாடு பண்பாட்டு வளர்ச்சி உள்ளிட்ட நடவடிக்கைகள் ஒற்றுமை அரசாங்கத்தால் தொடர்ந்து முன்னெடுக்கப்படுகின்றன. ஆகவே இந்திய சமூகத்தினர் பிரதமர் அன்வர் இப்ராஹிமின் தலைமைத்துவத்தின் மீது முழு நம்பிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் வளர்ச்சிக்கான திட்டங்களுக்கு ஒத்துழைக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார். எமது இந்திய சமூகம் நிதானத்துடனும் ஒற்றுமையுடன் செயல்பட்டால் நம்முடைய சமூக முன்னேற்றத்திற்கான மாபெரும் வளர்ச்சியை நாங்கள் உறுதி செய்யலாம். இந்த நிதி உதவி இந்திய சமூகத்திற்கு அரசு வழங்கும் ஒரு சான்றாகும் என்று அவர் மேலும் கருத்து தெரிவித்தார்.
