
தென்னிந்திய பிரபல நடிகர் நெப்போலியன் அவர்கள் குறுகிய கால வருகையாக மலேசியா வருகை தர உள்ளார். இங்குள்ள தனது ரசிகர்களையும் நண்பர்களையும் சந்திக்க உள்ளார். தமிழ் மலையாளம் தெலுங்கு உள்ளிட்ட பல திரைப்படங்களில் குணச்சித்திர நடிகராகவும் வில்லனாகவும் தனது திறமையான நடிப்பின் மூலம் மக்களை கவர்ந்தவர் நெப்போலியன். தற்பொழுது மெமரிக்காவில் பெரும் தொழிலதிபராக உள்ளார். நடிகர் நெப்போலியன் மலேசியா வருவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் பிரபல ஓவியர் சொர்ணம் அவர்கள் ஏற்பாடு செய்து வருகின்றார்.

