
வேத மந்திரங்கள் தமிழில் முழங்க முதல்முறையாக ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலய கும்பாபிஷேகம் மிக சிறப்பாக நடைபெற உள்ளது . ஞாயிற்றுக்கிழமை 2 3 20 25 ஞாயிற்றுக்கிழமை 9 9:00 மணியில் இருந்து பத்து மணி வரை மகா கும்பாபிஷேகம் மிக சிறப்பாக நடைபெற உள்ளது. ஆலயத் தலைவர் வீர பக்தன் ராஜு கூறும்போது, இவ்வாலயம் சுமார் 12 ஆண்டுகளாக போராட்டத்தின் பிறகு மாநில மாநில அரசினால் அங்கீகரிப்பட்டு நிலா பட்டா வழங்கப்பட்டுள்ளது. இவ்வாலயம் பழமை வாய்ந்ததாகும். இப்பொழுது பல லட்சம் பல லட்சம் வெள்ளி செலவில் புதுப்பிக்கப்பட்டு கோவில் கம்பீரமாக உள்ளது. இதற்கு அதிகமான நல்ல உள்ளங்கள் ஆதரவு அளித்துள்ளன. அவர்களுக்கு நன்றி. ஆரம்பத்தில் அமரர் சாமிவேலு, அமரர் டத்தோ சிவலிங்கம் போன்றவர்களும் மற்ற நல்ல உள்ளங்களும் ஆதரவு கொடுத்த உதவியாள் இவ்வாலயம் முழுமை பெற்று இப்பொழுது கும்பாபிஷேகம் காண உள்ளது.


