28.5 C
Kuala Lumpur
Thursday, June 25, 2026

Vetri

வேறொருவருக்கு ரமலான் சந்தை கடைகளுக்கான உரிமத்தை அதிக விலையில் விற்கும் செயலுக்கு சுல்தான் ஷராஃபுடின் கண்டனம்

🔥 Views : 9
👁 Reading Now : 48

உண்மையில் வணிகம்  செய்யும் நோக்கத்துடன் இருப்பவர்களுக்கு ரமலான் சந்தைகளில் வர்த்தகம் செய்ய உரிமம் வழங்குவதை மாநில அரசு உறுதி செய்ய வேண்டும் என்று சிலாங்கூர் ஆட்சியாளர் சுல்தான் ஷராபுடின் இட்ரிஸ் ஷா தெரிவித்தார்.

மூன்றாம் தரப்பினருக்கு ரமலான் சந்தை கடைகளுக்கான உரிமத்தை அதிக விலையில் விற்கும் செயலைத் தாம் கண்டிப்பதாகவும் இது பொதுமக்களுக்குச் சுமையை ஏற்படுத்தும் என்றும் சுல்தான் ஷராபுடின் குறிப்பிட்டார். 

“எனது அரசாங்கம் முஸ்லிம்களுக்கு பல்வேறு இப்தார் உணவுகள் மற்றும் ஐடில்ஃபித்ரிக்கான தயாரிப்புகளை விற்க ரமலான் பஜார் நிலங்களை வழங்குகிறது என்று எனக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த கடை வளாகங்கள் உண்மையிலேயே வணிகம் செய்ய விரும்புவோருக்கு வழங்கப்பட வேண்டும் என்றும் பொறுப்பற்ற தரப்பினருக்கு விற்கப்படக் கூடாது என்றும் அவர் வலியுறுத்தினார். 

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles