29.4 C
Kuala Lumpur
Saturday, June 6, 2026

Vetri

ஆயர் கூனிங் சட்டமன்ற உறுப்பினர் இஷாம் ஷஹ்ருடின் காலமானார்

🔥 Views : 8
👁 Reading Now : 57

ஆயர் கூனிங் சட்டமன்ற உறுப்பினர் இஷாம் ஷஹ்ருடின் இன்று தனது 58ஆவது வயதில் காலமானார்.

இந்த விஷயத்தை தாப்பா அம்னோ இளைஞர் தலைவர் ஃபஹ்மி ஜாக்சி உறுதிப்படுத்தினார்.

முன்னதாக அவர் இன்று மாலை சுமார் 5.20 மணியளவில் அவர் திடீரென்று கீழே விழுந்து மயக்கமடைந்ததாக வடகிழக்கு பினாங்கு மாவட்ட போலிஸ் தலைவர் அப்துல் ரோசாக் முஹம்மது தெரிவித்தார்.

பினாங்கு ஜார்ஜ்டவுன் சிட்டி அரங்கில் பினாங்கு முதலமைச்சர் கிண்ண நான்கு முனை கால்பந்து போட்டி நடைபெற்றது.

அப்போது  மைதானத்தின் ஓரத்தில் மற்ற வீரர்களுடன் கைகுலுக்கும் போது அவர் மயங்கி விழுந்தார்.

உடனே அவருக்கு அவசர உதவிகள் வழங்கப்பட்டது.

அதன் பின்னர், அவர் மாலை சுமார் 5.40 மணியளவில் பினாங்கு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

பினாங்கு மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் மாலை 6.28 மணிக்கு அவர் இறந்துவிட்டதாக உறுதி செய்யப்பட்டது என்று அவர் ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

1966ஆம் ஆண்டு ஆகஸ்ட் 31ஆம் தேதி பிறந்த இஷாம் ஷஹ்ருடின் ஒரு முன்னாள் கால்பந்து வீரர் ஆவார்

மேலும் தனது வாழ்க்கையின் பெரும் பகுதியை பேரா அணிக்காக விளையாடியுள்ளார்.

1990ஆம் ஆண்டு பேரா மாநிலம் எப்ஏ கிண்ணத்தை வென்றபோது, ​​அவர் அந்த அணியின் வீரர்களில் ஒருவராக இருந்தார்.

தாப்பா அம்னோ பிரிவுத் தலைவரான இஷாம், கடந்த பொதுத் தேர்தலில் ஆயர் கூனிங் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles