29 C
Kuala Lumpur
Saturday, June 6, 2026

Vetri

கோழிக் குஞ்சுகள் விரைவிலேயே பருமனமாவதற்கு தரப்படும் நுண்ணுயிர் தடை செய்யப்பட வேண்டும்

🔥 Views : 9
👁 Reading Now : 66

கோழி பண்ணையாளர்கள் கோழிக் குஞ்சுகள் சீக்கிரமாக வளர வேண்டும், பருமனாக வேண்டும் என்பதற்காக தரப்படுகின்ற  நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்தை மலேசியாவில் தடை செய்ய வேண்டும் என பினாங்கு பயனீட்டாளர் சங்கத் தலைவர் முஹைதீன் அப்துல் காதற் சுகாதார அமைச்சை கேட்டுகொண்டுள்ளார்.

இந்த தடையை மிக விரைவாக மேற்கொள்ளப்பட வேண்டும் என  அவர் கூறினார்.

2023 ஆம் ஆண்டில் ஒரு மலேசிரியர் ஆண்டிற்கு சராசரி 50.5 கிலோ கிராம் எடை கொண்ட கோழி இறைச்சியை உண்பதாகவும் இதனால் மலேசியா உலகளவில் கோழி இறைச்சியை அதிகம் பயன்படுத்தும் நாடுகளில் ஒன்றாக விளங்கியது என்றார் முஹைதீன்.

தரவுகளின்படி மலேசியா இப்போது தென்கிழக்கு ஆசியாவில் தனிநபருக்கான கோழி இறைச்சி நுகர்வில் முன்னணியில் உள்ளது.

இருப்பினும், கோழிகளுக்கான இந்த அதிக தேவை கால்நடைத் தொழிலில் நுண்ணுயிர் எதிர்ப்பிகளின் பரவலான பயன்பாடு குறித்து குறிப்பிடத்தக்க கவலைகளை எழுப்பியுள்ளது.

 பல ஆண்டுகளாக, பினாங்கு பயனீட்டாளர் சங்கம் நடத்திய ஆய்வுகளில் மலேசிய பண்ணைகளில் பரவலான நுண்ணுயிர் எதிர்ப்பு பயன்பாட்டை வெளிப்படுத்தியிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

முதன்மையாக கோழிகளுக்கு சிகிச்சையளிப்பதற்கும் கொழுப்பை அதிகரிப்பதற்கும் இந்த அபாயகரமான நுண்ணுயிர் எதிர்ப்பு பயன்படுத்தப்படுகிறது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles