28.4 C
Kuala Lumpur
Saturday, April 18, 2026

Vetri

ரமலானில் உணவை வீணாக்காதீர்; நெகிழிகளைப் பயன்படுத்தாதீர்: பினாங்கு பயனீட்டாளர் சங்கம் வேண்டுகோள்

ரமலான் காலம் ஆன்மீக சிந்தனை, சுய ஒழுக்கத்திற்கான நேரம் என்றாலும், துரதிர்ஷ்டவசமாக, சிலருக்கு இது விருந்து, வீண் செலவுகளின் காலமாக மாறிவிட்டது என்று பினாங்கு பயனீட்டார்  சங்கதின் தலைவர் முஹைதீன் அப்துல் காதர் தெரிவித்தார்.

புனிதமான ரமலானில் நமது பயனீட்டு பழக்கவழக்கங்களால் ஏற்படும் சுற்றுச்சூழல்பாதிப்பு குறித்துசிந்திக்குமாறு அனைத்து மலேசியர்களையும் பினாங்கு பயனீட்டார்  சங்கம் கேட்டுக்கொள்வதாக அவர்தெரிவித்தார்.

மிதமிஞ்சிய உணவு கழிவு கவலை தரும் விஷயமாக மாறிவருகிறது. இப்தார்ம், சஹர் போன்றவற்றிற்கு, குறிப்பாக சந்தைகளில் நோன்பு திறப்பதற்காக அதிகப்படியான உணவு தயாரிப்பது, கணிசமான உணவை வீணாக்கும் நம்மிடம் அதிகரித்துள்ளது.

 2023 ஆம் ஆண்டில் திடக்கழிவு மேலாண்மை மற்றும் பொது சுத்திகரிப்பு கழகத்தின்  கூற்றுப்படி, ரமலான் மாதத்தில் மலேசியா 75,000 டன் உணவை வீணடித்துள்ளது என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles