30.8 C
Kuala Lumpur
Thursday, June 25, 2026

Vetri

கோலகுபு பாருவில் ஸ்ரீ முருகன் கல்வி நிலையம் அதிகாரப்பூர்வமாக தொடங்கியது! 60 மாணவர்கள் காலடி எடுத்து வைத்தனர்

🔥 Views : 11
👁 Reading Now : 23

உலு சிலாங்கூர் நாடாளுமன்ற தொகுதியில் உள்ள கோலகுபு பாருவில் ஸ்ரீ முருகன் கல்வி நிலையம் இன்று அதிகாரப்பூர்வமாக தொடங்கியுள்ளது என்று அதன் ஒருங்கிணைப்பாளர் புகனேஸ்வரி சண்முகம் தெரிவித்தார். கோலகுபு பாரு தமிழ் பள்ளியில் அதிகாரப்பூர்வமாக தொடங்கி இருக்கும் ஸ்ரீ முருகன் கல்வி நிலையத்தில் மாணவர்கள் உற்சாகமாக காலடி எடுத்து வைத்தனர். கடந்த 43 ஆண்டுகளாக ஸ்ரீ முருகன் கல்வி நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்திய மாணவர்களியே கல்விப் புரட்சியை ஏற்படுத்த வேண்டும் என்று டான்ஸ்ரீ டாக்டர் எம் தம்பிராஜா இந்நிலையத்தை தொடங்கி வைத்தார். இந்த 43 ஆண்டுகளில் ஆயிரக்கணக்கான பட்டதாரிகளையும் ஸ்ரீ முருகன் கல்வி நிலையம் உருவாக்கி உள்ளது.

நாடு தழுவிய நிலையில் பல இடங்களில் ஸ்ரீ முருகன் கல்வி நிலையம் வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது. இப்பயணத்தில் புதிய அத்தியாயமாக ஸ்ரீ முருகன் கல்வி நிலையம் கோலகுபு பாருவிலும் கால் பதித்துள்ளது என்று அவர் சொன்னார். கோல குபு பாரு தமிழ்ப்பள்ளியில் செயல்படும் இந்நிலையத்தில் முதல் கட்டமாக 60க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயில தொடங்கியுள்ளர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles