29 C
Kuala Lumpur
Saturday, April 18, 2026

Vetri

மலேசிய இந்திய கலைஞர்கள் அறவாரியத்தின் ஏற்பாட்டில்மே 31 ஆம் தேதி மாபெரும் கலைக்கோர் விருதளிப்பு விழா!

கோலாலம்பூர் மார்ச் 4-
யாசி எனப்படும் மலேசிய இந்தியர் கலைஞர்கள் அறவாரியத்தின் ஏற்பாட்டில் வரும் மே மாதம் 31 ஆம் தேதி செந்தூல் High Convention மண்டபத்தில் மிகப்பெரிய அளவில் கலைக்கோர் விருதளிப்பு விழா நடைபெறுகிறது என்று யாசி தலைவர் டத்தோ வி.கே.கே.தியாகராஜன் தெரிவித்தார்.

வரும் மே 31 ஆம் தேதி மாலை 6.00 மணிக்கு மேல் இந்த விருதளிப்பு விழா தொடங்குகிறது.

பல்வேறு கலை துறைகளில்
மொத்தம் 35 கலைஞர்களுக்கு விருதுகள் வழங்கப்படும் என்று அவர் சொன்னார்.

கடந்த 1999 ஆம் ஆண்டு மறைந்த துன் டாக்டர் சாமிவேலு அவர்களால் மலேசிய இந்திய கலைஞர்கள் அறவாரியம் தொடங்கப்பட்டது.

மலேசிய இந்திய கலைஞர்கள் நன்மையை கருத்தில் கொண்டு அமைக்கப்பட்ட யாசி விருதளிப்பு விழாவில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொள்கிறார்கள்.

ம இகா தேசிய துணை தலைவர், யாசி அறங்காவலர் மற்றும் விழா ஏற்பாட்டுக் குழு தலைவர் டத்தோஸ்ரீ எம் சரவணனின் முழு ஒத்துழைப்போடு இந்த விருதளிப்பு விழா விமரிசையாக நடைபெறும் என்று டத்தோ வி.கே.கே.தியாகராஜன் தெரிவித்தார்.

இதனிடையே இந்த விழாவில் பல்வேறு திறமைகளை கொண்ட 30 க்கும் மேற்பட்ட கலைஞர்களுக்கு விருதுகள் வழங்கி சிறப்பிக்கப்படும். எந்த கலைஞரும் விடுபட மாட்டார்கள் என்று டத்தோஸ்ரீ சரவணன் தெரிவித்தார்.

இன்று ம இகா தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

யாசி செயலாளர் சங்கமம் சுப்ரா, அறங்காவலர் நாகராஜ், நிர்வாக குழு உறுப்பினர்கள் கலைஞர் இராமச்சந்திரன், பிரான்சிஸ் செல்வன், சந்திரா சூரியா, ம இகா ஊடக பிரிவுத் தலைவர் சிவசுப்பிரமணியம் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles