30.8 C
Kuala Lumpur
Thursday, June 25, 2026

Vetri

ஆசிரியை ரீத்தா நடராஜாவுக்கு எதிரான அவதூறு வழக்கு தள்ளுபடி

🔥 Views : 9
👁 Reading Now : 61

தமிழ்ப்பள்ளி ஆசிரியை ரீத்தா நடராஜாக்கு எதிராக தொடரப்பட்ட அவதூறு வழக்கு, இன்று சிலிம் ரிவர் மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது.

கடந்த மார்ச் 2023-ஆம் ஆண்டில் ஒரு கிளினிக்கில் அத்துமீறி நுழைந்ததாக கூறி ரீத்தா மீது வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு தொடர்பாக, அவரது வழக்கறிஞர், டத்தோ சீலன் அர்ஜூனன், உண்மையான ஆவணங்களுடன் தக்க ஆதாரங்களை நீதிமன்றத்தில் சமர்பித்தார்.

பேராக் மாநில அரசு தரப்பு வழக்கறிஞர் முன்வைத்த ஆவணங்கள் ஆய்வு செய்த பிறகு இந்த வழக்கு பொய்யானது என்றும் நீதிமன்றம் உறுதிப்படுத்தியது.

தமிழ்ப்பள்ளி மாணவர்களின் வளர்ச்சிக்காகப் பாடுபட்ட ஓர் ஆசிரியை மீது தவறான வழக்கு தொடரப்பட்டது.

ஆனால், உண்மை வென்றுள்ளது. சிலிம் ரிவர் மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தின் தீர்ப்பு, நீதியை நிலைநாட்டியுள்ளது என வழக்கறிஞர் டத்தோ சீலன் கூறினார்.

என்னை எதிர்த்தவர்கள், எனக்கு எதிராகக் கல்வி அமைச்சில் பொய் புகார் அளித்தனர். ஆனால், விசாரணையில் நான் குற்றமற்றவள் என்பதும் நிரூபனமானது.

இந்த வழக்கு முழுவதும் திட்டமிட்ட சதி வேலை என்பது இப்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது என ஆசிரியர் ரீத்தா கூறினார்.

மேலும், ஒரு நபர் தம்மை நிருபராகக் காட்டிக்கொண்டு டிக்-டாக் மூலம் அவதூறுகளைப் பரப்பி வருகின்றார்.

இவர் மீது பல்லூடக அமைச்சு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவர் உண்மையில் நிருபர் தானா அல்லது பணம் பெற்றுக் கொண்டு பொய் செய்தி எழுதுகிறாரா? என்பதை விசாரிக்க வேண்டும் என்றார்.

நீதிமன்றம் வழக்கை முழுமையாகத் தள்ளுபடி செய்துள்ள நிலையில்,  இதுநாள் அவரைத் தமக்கு ஆதரவாக இருந்த குடும்பத்தினர், நண்பர்கள், நலன் விரும்பிகள் அனைவருக்கும் ரீத்தா நடராஜா தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles