
கோலாலம்பூர் மார்ச் 9
தமிழ் கடவுள் முருகப் பெருமானுக்கு கொண்டாப்படும் தைப்பூசத்தை முன்னிட்டு பக்தர்கள் வேல் வேல் என்று காவடி எடுக்கும் நடனத்தை கேலி கிண்டல் செய்த ஆஸ்ட்ரோ நிறுவனத்தின் ஏரா எப்.எம். ஊழியர்கள் அனைவர் மீதும் தக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று ம இகா பணிப்படை போலீஸ் புகார் செய்துள்ளது.
தற்போது மூன்று பணியாளர்கள் மீது மட்டுமே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஆனால் இந்த விடியோவில் கேலி கிண்டல் செய்து சிரித்து கொண்டிருக்கும் அனைத்து ஊழியர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று ம இகா உச்சமன்ற உறுப்பினர் மற்றும் பணிப்படை குழு தலைவர் ஆண்ட்ரூ டேவிட் தெரிவித்தார்.
ஆஸ்ட்ரோ நிறுவனம் மூன்று ஊழியர்களை இடைக்கால நீக்கம் செய்துள்ளது.
இது போதாது. இந்த சம்பவம் நடந்த போது அங்கு இருந்து கிண்டல் அடிக்கும் அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று அவர் சொன்னார்.
இன்று கோலாலம்பூர் டாங் வாங்கி போலீஸ் நிலையத்தில் புகார் செய்த பிறகு ஊடகவியலாளரிடம் பேசுகையில் ஆண்ட்ரூ டேவிட் இதனை தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
