28.8 C
Kuala Lumpur
Monday, April 6, 2026

Vetri

மலேசியக் கலைஞர்களுக்கு புதிய தமிழ் திரைப்படத்திற்கு வாய்ப்பு!

அண்மையில் பிஜே கிளப்பில் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது இதில் தமிழகத்தைச் சேர்ந்த இயக்குனர் விஜயஸ்ரீ மற்றும் மலேசிய தொழில் அதிபர் மற்றும் கலை நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து நடத்தி வரும் விஷால் மேலும் தொழில் அதிபரும் டாக்டர் தத்து கணேசன் ஆகியோர் கலந்துகொண்டு பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தினார்கள். இயக்குனர் பேசும்போது நான் ஏற்கனவே மோகனை வைத்து படத்தை தயாரித்து இயக்கியுள்ளேன் மேலும் பல படங்களுக்கு உதவி இயக்குனராகவும் இப்பொழுது இயக்குனராகவும் வெற்றி பெற்றுள்ளேன் மேலும் விஷால் நத்தோ கணேசன் ஆதரவில் தமிழக கலைஞர்களையும் மலேசிய கலைஞர்களையும் வைத்து ஒரு படத்தை தயாரிக்க வேண்டும் என்று ஆசை அதை நானே இயக்க வேண்டும் என்பதும் என்னுடைய குறிக்கோள்.

அந்த வகையில் மலேசிய கலைஞர்களுக்கும் முக்கிய வாய்ப்புகள் இத்திரைப்படத்தில் வழங்கப்படும் என்றார் மேலும் இத்திரைப்படத்தில் மலேசியக் கலைஞர்களோடு மொட்டை ராஜேந்திரன் சிங்கம் புலி தீபா போன்ற கலைஞர்களும் மலேசிய கலைஞர்களும் நடிக்க உள்ளனர் மலேசியக் கலைஞர்கள் திறமையானவர்கள் அவர்கள் திறமையை வெளிக் கொண்டு வர இது உதவியாக இருக்கும் என்றார் எனக்கு ஆதரவாக விஷாலும் தத்து கணேசனும் இருப்பார்கள் தத்து கணேசனும் இந்தத் திரைப்படத்தில் முக்கிய இடத்தில் நடிக்கிறார் இதற்கான மற்றும் ஒரு நடிகர்கள் தேர்வில் உங்களை சந்திக்க உள்ளேன் என்றார் இது சம்பந்தமாக கலை உலகம் பிரபாவிடம் தொடர்பு கொள்ளலாம் என்றார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles