
தமிழ் நாட்டில் சைதாப்பேட்டையில் உள்ள அன்னை வேளாங்கண்ணி கலைக் கல்லூரியில் துன் சாமி வேலு அவர்களின் பிறந்த நாள் விழா உலக நேசன் பத்திரிகையின் ஆண்டு மலர் வெளியீட்டு விழா சாதனையாளர்களுக்கு விருது வழங்கும் விழா என முப்பெரும் விழா நடைபெற்றது இந்த விழாவில் மக்கள் ஓசை நாளிதழின் புகைப்பட கலைஞர் பி மலையாண்டி அவர்களுக்கு துன் சாமி வேலு அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு வாழ் நாள் சாதனையாளர் விருதை மலேசியாவின் தமிழகதத்திற்கான தூதரக அதிகாரி சரவணக்குமார் அவர்கள் வழங்கி சிறப்பித்தார் இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை உலக நேசன் பத்திரிகையாசிரியர் ES மணி அவர்கள் ஏற்பாடு செய்து இருந்தார்
