25.3 C
Kuala Lumpur
Sunday, April 19, 2026

Vetri

மக்கள் பிரச்சினைகளுக்கு தீர்வு கொண்டுள்ளது – தேசிய கூட்டணி

வருமானப் பற்றாக்குறை,பொருட்களின் விலை உயர்வு உள்ளிட்ட மக்கள் தற்போது எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சனைகளுக்கு  தேசிய கூட்டணியிடம் தீர்வுகள் உள்ளன என்று அதன் தலைவர்  முஹைதின் யாசின் தெரிவித்தார். 

முழுமையான தீர்வுகள் குறித்து அவர் வெளிப்படையாகக் கூறவில்லை. 

இருப்பினும், 16-ஆவது பொதுத் தேர்தலில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டால் தேசிய கூட்டணியின் கீழ் செயல்படும் அரசு அனைத்துப் பிரச்சனைகளுக்கும் உரியத் தீர்வை வழங்கும் என்றும் முஹைதின் தெரிவித்தார். 

வருமானம் அதிகரிக்கவில்லை. ஆனால் பொருட்களின் விலை அதிகரித்து வருகின்றது.

மார்ச் 9-ஆம் தேதி 16-ஆவது பொதுத் தேர்தலில் வெற்றி பெற்று அரசாங்கத்தை அமைப்பதற்காக கூட்டணிக்கான மக்களின் ஆதரவு தொடர்ந்து அதிகரிப்பதை உறுதி செய்வதற்கான மூன்று செயல் திட்டங்களை முஹைதின் குறிப்பிட்டிருந்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles