28.4 C
Kuala Lumpur
Friday, April 24, 2026

Vetri

தமிழ்ப்பள்ளிகள் மீது அரம் ‘ஏ.ஐ’ திட்டம் தனது கவனத்தை செலுத்தியுள்ளது

தமிழ்ப்பள்ளி மாணவர்களிடையே செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ) விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் அரம் ‘ஏ.ஐ’ திட்டம் தனது கவனத்தை திருப்பியுள்ளதாக தேசிய ஒருமைப்பாட்டு துறை துணையமைச்சர் செனட்டர் சரஸ்வதி கந்தசாமி கூறினார்.
இந்த அரம் ‘ஏ.ஐ’ திட்டம் தமிழ்ப்பள்ளி மாணவர்களிடையே ஒரு பெரிய உருமாற்றத்தை ஏற்படுத்தும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
நேற்று இங்கு கோலா தெர்லா தமிழ் பள்ளியில் ‘ஏ.ஐ’ எங்களின் எதிர்காலம் என்ற பயிற்சி திட்டத்தை தொடக்கி வைத்து அவர் பேசினார்.


அரம் ‘ஏ.ஐ’ திட்டத்தின் அமலாக்கம் குறித்து இந்த பயிற்சி திட்டத்தில் ஒரு புரிந்துணர்வு காணப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
இதன் தொடக்க கட்டமாக கேமரன் மலையில் உள்ள 8 தமிழ் பள்ளிகள் இந்தத் திட்டத்திற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
செயற்கை நுண்ணறிவு குறித்து முழுமையான விவரங்களை அறிந்திருக்க வேண்டும் என்ற அரசாங்கத்தின் முயற்சிக்கு துணை புரியும் வகையில் அரம் ‘ஏ.ஐ’ திட்டம் துணை புரியும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
இவ்வாண்டு இறுதிக்குள் நாடு தழுவிய நிலையில் சுமார் 8 லட்சம் பேர் இந்த செயற்கை நுண்ணறிவு தகவல்களை முழுமையாக பெற்றிருக்க வேண்டும் என்ற இலக்கை அரசாங்கம் கொண்டுள்ளதாக அவர் சொன்னார்.
இந்த வகையில் குறிப்பாக தமிழ் பள்ளி மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் செயற்கை நுண்ணறிவு தகவல்களை முழுமையாக பெற்றிருக்க வேண்டிய அவசியம் உள்ளதாக அவர் சுட்டிக் காட்டினார்.
இந்த இலக்கை அடைய அரம் ‘ஏ.ஐ’ திட்டம் முழுமையான ஒத்துழைப்பை வழங்கும் என அவர் உறுதியளித்தார்.
இந்த விவகாரத்தில் குறிப்பாக தமிழ்ப்பள்ளி மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் முக்கிய பங்காற்ற வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.
செயற்கை நுண்ணறிவு விவகாரத்தில் எந்த நிலையிலும் இந்திய மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் பின் தள்ளப்பட்டவர்களாக இருக்கக் கூடாது என அவர் நினைவுறுத்தினார்.
நாட்டின் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப இந்த செயற்கை நுண்ணறிவை நாம் ஆக்கிரமிப்பு கொள்ள வேண்டும் என்றார் அவர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles