30.1 C
Kuala Lumpur
Friday, April 17, 2026

Vetri

வேக வரம்பு மீறலை கண்டறிய புதிய “புள்ளிக்கு புள்ளி” Ai கண்காணிப்பு முறை

மலேசியாவில் வேக வரம்பு மீறல்களை தானியங்கி முறையில் கண்காணிக்க “புள்ளிக்கு புள்ளி” (Point-to-Point) கண்காணிப்பு முறை ஜூன் மாதத்திற்குள் முன்னோடி சோதனையாக தொடங்கும் என்று போக்குவரத்து அமைச்சு அறிவித்துள்ளது.

முக்கிய அம்சங்கள்

🔹 AI தொழில்நுட்பம் & தானியங்கி பாதுகாப்பு அமைப்பு

  • வேகக்கட்டுப்பாட்டை உறுதிப்படுத்த செயற்கை நுண்ணறிவு (AI) பயன்படுத்தப்படும்.
  • பயண நேரம் மற்றும் தூரத்தை அளவிட்டு, வேக வரம்பை மீறியவர்களை தானாகவே கண்டறியும்.

🔹 சோதனை நடத்தப்படும் இடங்கள்

  • கெந்திங் Sempah சுரங்கப்பாதை – கோம்பாக் ஓய்வு நிறுத்தம்
  • செனாவாங் டோல் – சிம்பாங் ஆம்பட் (அலோர் கஜா) டோல்
  • மெனோரா சுரங்கப்பாதை – சுங்கை பேராக் ஓய்வு நிறுத்தம் (விபத்துக்கள் அதிகம் நிகழும் இடம்)
  • 🔹 எப்படி செயல்படும்?
  • டோல் சுங்கச்சாவடிகளில் நிறுவப்படும் இந்த அமைப்பு, பயணிகளின் முழு பயண நேரத்தையும் பதிவு செய்யும்.
  • பயண நேரத்தைக் கணக்கிட்டு, வேக வரம்பு மீறப்பட்டதா? என்பதை தானியங்கி முறையில் கண்டறியும்.
  • 🔹 அரசாங்கத்துக்கு கூடுதல் செலவில்லா திட்டம்
  • தனியார் நிறுவனம் இந்த அமைப்பை நிறுவுவதை நிதி உதவியின்றி (zero cost) செய்யும்.
  • பொதுமக்களின் கருத்துக்களை பெற, அந்த நிறுவனம் அமைப்பை முன்மாதிரியாக செயல்படுத்தும்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles