25.3 C
Kuala Lumpur
Friday, April 17, 2026

Vetri

ஸ்ரீ பத்ரகாளியம்மன் ஆலய சர்ச்சைக்கு நல்லிணக்க சூழ்நிலையில் தீர்வு காணப்பட்டது!

கோலாலம்பூர் மார்ச் 26
பெரும் சர்ச்சையாக இருந்து வந்த மாஸ்ஜிட் இந்தியாவில் உள்ள ஸ்ரீ பத்திரகாளியம்மன் ஆலய பிரச்சனைக்கு நல்லிணக்க சூழ்நிலையில் தீர்வு காணப்பட்டதாக தேசிய ஒருமைப்பாட்டு துறை துணையமைச்சர் செனட்டர் சரஸ்வதி கந்தசாமி கூறினார்.
தொடக்க காலம் முதல் மத சுதந்திர கொள்கை உறுதி செய்யப்படும் என அரசாங்கம் தொடக்கம் முதல் வலியுறுத்தி வந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
அரசாங்கம் எடுக்கும் ஒவ்வொரு முடிவிலும் பல்லின மக்களின் நல்லிணக்கம் உறுதி செய்யப்படுவதாக அவர் தெரிவித்தார்.
இன்று மாநகர் மன்றத்தில் இந்த ஆலய இடமாற்றத்திற்கு 4,000 சதுர அடி நிலப்பட்ட வழங்கும் நிகழ்ச்சிக்கு பிறகு அறிக்கை ஒன்றில் அவர் குறிப்பிட்டார்.
இந்த ஆலய இடமாற்றத்திற்கான கடிதத்தை கூட்டரசு பிரதேச அமைச்சர் டத்தோஸ்ரீ சலேஹா முஸ்தபா ஆலய நிர்வாகத்திடம் வழங்கினார்.
இந்த ஆலயத்தில் வடிவமைப்பு ஒருபோதும் உடைப்படாது என கூட்டரசு பிரதேச அமைச்சர் உறுதியளித்துள்ளதாக அவர் சொன்னார்.
இந்த ஆலயம் இடமாற்றம் செய்யப்படும் வரை ஆலயம் வழக்கமாக செயல்படும் என அமைச்சர் உறுதி அளித்துள்ளதாக அவர் சொன்னார்.
அரசாங்கத்தின் இந்த சுமூகமான தீர்வு குறிப்பாக ஸ்ரீ பத்திரகாளியம்மன் ஆலயத்திற்கு மட்டுமே. காரணம் இந்த சம்பவத்தை காரணமாக காட்டி இதர வழிபாட்டுத்தலங்கள் செயல்படக்கூடாது என அரசாங்கம் வலியுறுத்தி உள்ளதாக அவர் சுட்டிக் காட்டினார்.
இனி வரும் காலங்களில் அமைக்கப்படும் ஆலயங்கள் சட்டம் மற்றும் விதிமுறைகளை பின்பற்றி செயல்பட வேண்டும் என அரசாங்கம் உறுதியாக உள்ளதாக அவர் தெரிவித்தார்.
இது போன்ற சர்ச்சைகள் உடனடியாக நிறுத்திக் கொள்ளப்பட வேண்டும்.
நமது நாட்டின் வலிமைக்கு அடிப்படையாக இருந்து வரும் நல்லிணக்கம் மற்றும் அமைதியை கட்டி காப்பது நமது கடமை ஆகும் என அவன் நினைவுறுத்தினார்.
ஸ்ரீ பத்ரகாளியம்மன் ஆலய பிரச்சனைக்கு சுமுகமான தீர்வு காணப்பட்டுள்ளது தமக்கு நிம்மதியை தருவதாக செனட்டர் சரஸ்வதி கந்தசாமி தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles