
பெண்கள் ஆண்களுக்கு நிகராக அனைத்து துறைகளிலும் தங்களின் திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.
இவற்றை நினைவு கூறும் வகையில் உலக மகளிர் தினத்தை முன்னிட்டு உலக மலையாளிகள் கூட்டமைப்பின் மகளிர் அணி கடந்த சில தினங்களுக்கு முன்பு ஷலபங்கள் 2.0 நிகழ்ச்சியை வெற்றிகரமாக நடத்தியது.
ஷலபங்கள் என்றால் மலையாள மொழியில் வண்ணத்துப்பூச்சி என்று பொருள்படும்.
அதேபோல் பெண்களும் அனைத்து துறைகளிலும் சுதந்திரமாக செயல்பட்டு சாதனைகளை படைக்க வேண்டும் என்ற நோக்கில் இந்த ஷலபங்கள் 2.0 நிகழ்ச்சி நடத்தப்படுவதாக உலக மலையாளிகள் கூட்டமைப்பின் மகளிர் அணி ஒருங்கிணைப்பாளர் ராஜலட்சுமி வெங்கடாசலம் கூறினார்.

நடனம், இசை மற்றும் வர்த்தகம் போன்ற துறைகளில் பெண்கள் ஆர்வம் கொண்டிருப்பர். ஆனால் எங்கு, எப்படி செய்வது என்பது குறித்து தெரியாமல் இருப்பர். ஆகையால் இந்த நிகழ்வை ஒரு தளமாக உருவாக்கி உலக மலையாளிகள் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் மற்றும் உறுப்பினர் அல்லாதவர்கள் இதில் பங்கு பெற்றுள்ளதாக அவர் தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் பெண் வர்த்தகர்கள் வியாபாரம் செய்ய வாய்ப்புகள் அளிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் பாடல்கள் மற்றும் நடனங்கள் போன்ற சிறப்பு அம்சங்கள் இடம் பெற்றன.
மேலும் இந்த நிகழ்ச்சியில் குழந்தை நல மருத்துவர் டாக்டர் பிரியா சதீஷ் சந்திரன் தொற்று, நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் குழந்தைகள் நலன் குறித்து விரிவாக மற்றும் தெளிவாக விளக்கங்களை தந்தார்.
இவரை பாராட்டும் வகையில் உலக மலையாளிகள் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் ஷர்மிளா நாயர் நினைவு பரிசை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் தின்பண்டங்கள் மற்றும் துணிமணிகள் விற்பனை நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சி வெற்றியடைய போதுமான ஆதரவை வழங்கிய கிளினிக் பாக்கார் வனிதாவை சேர்ந்த டாக்டர் ரேணுவிற்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் சுமார் 300 கலந்து கொண்டனர்.
