31.2 C
Kuala Lumpur
Thursday, August 20, 2026

Vetri

கிளந்தான் மாநிலத்தில் ஹரி ராயா சிறப்பு விடுமுறை – அரசின் தீர்வில் மக்கள் இருபால் கருத்து!

🔥 Views : 21
👁 Reading Now : 68

கிளந்தான் மாநிலத்தில் ஹரி ராயா பெருநாளை முன்னிட்டு வரும் மார்ச் 30 (ஞாயிற்றுக்கிழமை) சிறப்பு விடுமுறை வழங்கப்படுவதாக மாநில மந்திரி பெசார் டத்தோ முஹம்மத் நஸுருடின் அறிவித்துள்ளார்.

“மாநில மக்கள் தங்கள் குடும்பத்துடன் ஹரி ராயாவைக் கொண்டாட வசதியாக இருக்க வேண்டும் என்பதற்காகவே இந்த முடிவை எடுத்துள்ளோம்” என்று அவர் தெரிவித்தார்.

இருப்பினும், இந்த முடிவு அனைத்து வர்த்தகத்துறைகளுக்கும் பொருந்துமா? அல்லது சில துறைகள் செயல்பட வேண்டியிருக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

அதே நேரத்தில், சாலை நெரிசலைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக மாநில அரசு அறிவித்துள்ளது. இந்த சிறப்பு விடுமுறை மக்கள் வாழ்வில் உண்மையில் நன்மை பயக்குமா? அல்லது சில தொழில்களுக்கான தடையாக அமையுமா? என்ற விவாதம் சமூக வலைதளங்களில் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles