
🛑 ஜொகூர் மாநிலத்தில் நோன்புப் பெருநாள் கொண்டாட்டங்கள் தொடங்கிய அதே நாளில் 239 சாலை விபத்துகள் நடந்துள்ளதாக மாநிலக் போலிஸ் தலைவர் டத்தோ எம்.குமார் அதிர்ச்சிகரமான தகவல் வெளியிட்டுள்ளார்.
💥 மரணமடைந்த 4 பேர் – பொது மக்களுக்கு போலீசாரின் எச்சரிக்கை!
இவ்விபத்துகளில் நான்கு பேர் உயிரிழந்துள்ள நிலையில், விபத்து விகிதம் அதிகரித்திருப்பதால் பொதுமக்கள் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும் என போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.
🚗 அதிகாரிகள் எச்சரிக்கை – “பொறுமை காக்கும் நேரம் இது!”
பெருநாள் காலங்களில் போக்குவரத்து மிகுந்திருக்கும் என்பதால், மக்கள் பொறுமை காக்க வேண்டும் என்றும் வீதிகளில் பாதுகாப்பு முன்னேற்பாடுகளை பின்பற்ற வேண்டும் என்றும் போலீசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
📍 அமைதியான பெருநாள் கொண்டாட்டங்கள் – பொது மக்களின் பங்கேற்பே முக்கியம்!
ஜொகூர் போலிஸ் தலைமையகத்தில் உள்ள துங்கு லக்சமண அப்துல் ஜாலில் பள்ளிவாசலில் நடந்த நோன்புப் பெருநாள் ஒன்றுகூடலின் போது, போலீஸ் தலைவர் எச்சரிக்கை செய்தி விடுத்தார்.
