27.3 C
Kuala Lumpur
Saturday, April 18, 2026

Vetri

🔴 திருச்சியில் தங்கியிருந்த மலேசியர் திடீர் மரணம் – போலீசார் விசாரணை!

சுற்றுலா பயனமாக தமிழகத்துக்கு வந்திருந்த 79 வயதான மலேசியா பயணியொருவர், திருச்சியில் தங்கி இருந்தபோது திடீரென மாரடைப்பால் உயிரிழந்தார். இந்த சம்பவம் திருச்சி பகுதியில் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

மலேசியாவின் ஜொகூர் மாநிலத்தைச் சேர்ந்த ஜி. லோகன் என்பவர், தனது மனைவி சுப்பம்மாவுடன் அண்மையில் தமிழகத்துக்கு சுற்றுலா வந்திருந்தார். அவர்கள் திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்திற்கு அருகில் உள்ள ஒரு தங்குமிடத்தில் தங்கி இருந்தனர்.

சனிக்கிழமை காலை, லோகனுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக அங்கிருந்தோர் தெரிவித்தனர். உடனடியாக அவரை அருகிலுள்ள திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாலும், மருத்துவர்கள் பரிசோதித்த போது அவர் ஏற்கனவே உயிரிழந்திருந்தது உறுதியாகியுள்ளது.

இது தொடர்பாக கோட்டை காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து, மரணத்தின் காரணங்களை உறுதிப்படுத்தும் வகையில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சுற்றுலா பயணத்தின் போது வெளிநாட்டவர் மரணமடைந்த சம்பவம் உள்ளூர் மக்களிடையிலும், சுற்றுலா துறையிலும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles