28.5 C
Kuala Lumpur
Saturday, June 20, 2026

Vetri

🔴 கழிவறைக் குழிக்குள் கைவிடப்பட்ட குழந்தை – 18 வயது பெண்ணுக்கு ஒரு மாத சிறைத்தண்டனை!

🔥 Views : 12
👁 Reading Now : 70

பிறந்த குழந்தையை கழிவறைக் குழிக்குள் வீசிய 18 வயது பெண், இன்று சுங்கை பெசார் மேஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் முறையிடப்பட்டார். குழந்தைப் பிறப்பை மறைக்கும் நோக்கில் இந்தச் செயலை செய்ததாக அந்த பெண் ஒப்புக்கொண்டதையடுத்து, நீதிமன்றம் தண்டனை விதித்தது.

மார்ச் 23 ஆம் தேதி காலை 11 மணியளவில், கம்போங் சுங்கை ஹஜி டொரானியில் உள்ள எண்ணெய் நிலையத்தின் பெண்கள் கழிவறையில் இந்த அதிர்ச்சிகரமான சம்பவம் நடந்தது. உணவுக்கடை பணியாளராக பணியாற்றி வந்த அந்த இளம் பெண், குழந்தையை கழிவறைக்குள் வீசியதாக காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது.

சம்பவம் தொடர்பாக குற்றவியல் சட்டத்தின் 318-ஆவது பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த பிரிவின் கீழ் குற்றம் நிரூபிக்கப்பட்டால், அதிகபட்சம் 2 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்க வாய்ப்பு உள்ளது.

நீதிபதி, குற்றவாளி தனது முதல் குற்றமாகவும், குறும்பயசுள்ளவளாகவும் இருப்பதை கருத்தில் கொண்டு, 2,000 ரிங்கிட் அபராதம் மற்றும் ஒரு மாத சிறைத்தண்டனையை விதித்து தீர்ப்பு அளித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles