
மைஸ்கில் அறவாரியத்தின் ஏற்பாட்டில், வரும் ஏப்ரல் 27ஆம் தேதி, Dover Elevator கிண்ணம் வழங்கப்படும் சிறப்புப் பன்னிரண்டு வயது கீழ் கால்பந்து போட்டி, தஞ்சோங் மாலிம் மைஸ்கில் வளாகத்தில் சிறப்பாக நடைபெற இருக்கிறது.
இந்த போட்டியில் 17 வயதுக்கு உட்பட்ட எட்டு அணிகள் பங்கேற்கின்றன என்று மைஸ்கில் அறவாரியத்தின் இயக்குனர், வழக்கறிஞர் பசுபதி தெரிவித்தார்.
பங்கேற்கும் அணிகள்:
- My Skills FC
- Kalumbang Junior
- SMK Kalumbang
- Youth Tigers A & B
- Surian FC
- SR Elite FC A & B
இந்த போட்டியின் முதன்மை ஸ்பான்ஸராக Dover Elevator நிறுவனம் செயல்படுகிறது.
“இளையோர் மத்தியில் விளையாட்டு ஆர்வத்தை தூண்டும் வகையில், இந்த போட்டி மிகப்பெரிய அளவில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது,” என்று பசுபதி கூறினார்.
இன்று கோலாலம்பூர் டத்தாரான் மெர்டேக்கா சிலாங்கூர் கிளப்பில், மலேசிய தேசிய கால்பந்து அணியின் முன்னாள் பயிற்றுநர் டத்தோ கே. ராஜகோபால் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, போட்டியின் சாம்பியன் கிண்ணத்தை அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
மைஸ்கில் அறவாரியம், 2010 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு, கல்வியை பாதியிலேயே கைவிட்ட மாணவர்களுக்கு கைத்தொழில் மற்றும் தொழில்நுட்ப கல்வியை வழங்கி, கடந்த 15 ஆண்டுகளில் ஆயிரக்கணக்கான இளம் தொழில்நுட்ப வல்லுநர்களை உருவாக்கியுள்ளமை இந்த நிறுவத்தின் பெருமையாகும்.
