29.6 C
Kuala Lumpur
Saturday, January 24, 2026

Vetri

அரசாங்கத்தை குறை கூற வேண்டாம்; மக்களுக்கு சேவை செய்வதே என் கடமை – பிரபாகரன்!

அண்மையில் நடைபெற்ற ஒரு நேர்கானல் நிகழ்ச்சியில் உரையாற்றிய போது, பிரபாகரன், “அரசாங்கத்தை யாரும் குறை கூற வேண்டாம். அரசாங்கம் அனைவருக்கும் நன்மை செய்து வருகிறது,” என்று வலியுறுத்தினார்.

நமது பிரதமர் பல நல்ல திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளார் என்றும். அரசியலில் எனக்கு மறைந்த மஇகா தேசிய தலைவர் துன் சாமி வேலுவின் தைரியமும் தன்னம்பிக்கையும் எனது முன்மாதிரி. கல்லூரி மாணவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் எனக்குத் தெரியும். நானும் ஒரு சாதாரண மாணவனாக ஆரம்பித்து இன்று அரசியலில் வந்துள்ளேன். மாணவர்களும் தைரியம் கொண்டு அரசியலுக்குள் வரலாம்,” என்றார்.

பொதுமக்களுக்கு சேவை செய்வதையே தனது முதன்மை கடமையாகக் கூறிய பிரபாகரன், “கோவில் பிரச்சினை, பள்ளிக்கூட பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை அரசாங்கத்திடம் உரிய முறையில் எடுத்துச் சொல்லி நல்ல தீர்வுகளை பெற்றுள்ளேன். ஆனால் இதை விளம்பரப்படுத்த மாட்டேன். மக்களுக்கு என்ன செய்துள்ளோம் என்பதை அவர்கள் உணருவார்கள்,” என்று தெரிவித்தார்.

இப்போது டிக் டாக் போன்ற சமூக ஊடகங்களில் சிலர் அரசாங்கத்தை விமர்சிப்பதைக் காணக்கூடும் என்றும், “அப்படி விமர்சிப்பதற்கு முன் அனைத்தையும் ஆராய்ந்து பேச வேண்டும்,” என்றும் அவர் அறிவுறுத்தினார்.

“நமது பிரதமர் நமக்கு நலனே செய்து வருகிறார். மித்ரா மூலம் எனக்கு பதவி வழங்கி மக்களுக்கு சேவை செய்ய வாய்ப்பு அளித்துள்ளார். இதற்காக எனக்கு சம்பளமில்லை, இலவசமாக மக்களுக்காகவே பணியாற்றுகிறேன்,” என்றார்.

“உங்கள் குறைகளை என்னிடம் தெரிவிக்கலாம். எனக்கு அலுவலகம் உள்ளது. முடிந்தவரை மக்களை நேரில் சந்தித்து, அவர்களது தேவைகளை பூர்த்தி செய்ய முனைந்துள்ளேன்,” என்று பிரபாகரன் தனது உரையை முடித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles