28.5 C
Kuala Lumpur
Saturday, June 20, 2026

Vetri

பெரிக்கத்தான் நேஷனல் அனைத்தின மக்களையும் அரவணைக்கும் – ஹம்ஸா ஜைனுடின்

🔥 Views : 10
👁 Reading Now : 27

நாட்டில் உள்ள அனைத்து இனங்களையும் பெரிக்கத்தான் நேஷனல் அரவணைக்கும் என்று நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ ஹம்ஸா ஜைனுடின் தெரிவித்துள்ளார்.

“பெரிக்கத்தான் நேஷனல் ஒரு இனவாதக் கட்சி அல்ல. இது எங்கள்மீது சுமத்தப்படும் தவறான குற்றச்சாட்டாகும். பெரிக்கத்தான் நேஷனல் அனைத்து இனங்களுக்கும் உரிமைért போராடும் ஒரு கூட்டணியாக இருக்கிறது. யாரையும் புறக்கணிக்க மாட்டோம், அனைத்து இனங்களின் குரலாக நாங்கள் இருப்போம்,” என்று அவர் வலியுறுத்தினார்.

புரட்சி இயக்கத் தலைவர் உமா காந்தன் தலைமையில் பல்கலைக்கழக இந்திய மாணவர்களுக்கிடையில் நடைபெற்ற ‘தலைவன்’ நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போது அவர் இதனை தெரிவித்தார்.

இந்நிகழ்வில் மலேசிய இந்தியர் மக்கள் கட்சி (MIUP) தலைவர் புனிதன், துணை தலைவர் சுப்ரா உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்களும் கலந்துகொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles