
சோமா அரங்கில் டாக்டர் புருஷோத்தமனின் ஏற்பாட்டில் நடைபெற்ற “இன்னிசை தேன்மழை” என்ற இசை நிகழ்ச்சி அண்மையில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. நிகழ்வைத் தொடங்கி வைத்து, நிகழ்ச்சிக்காக ரூ.5000 வெள்ளி நன்கொடை வழங்கிய டத்தோ ஸ்ரீ சரவணன், “புருஷோத்தமன் போன்றவர்கள் உழைப்புடன் முன்னேறுவதை நாம் எடுத்துக்காட்டாக காணலாம்,” எனக் கூறினார்.

இசை நிகழ்ச்சியில் ராஜா மணிவண்ணன், உஷா மகேந்திரன் உள்ளிட்ட உள்நாட்டு கலைஞர்கள் கலந்துகொண்டு சிறப்பான பாடல்களைப் பாடினர். நிகழ்வில் பல முக்கிய பிரமுகர்களும் கலந்து சிறப்பித்தனர். அனைவரும் பாராட்டைப் பெற்றனர்.

