29 C
Kuala Lumpur
Saturday, June 20, 2026

Vetri

பாபா சென்டரில் அன்னையர் தினம் மற்றும் நிருபர் முருகனின் பிறந்தநான் கொண்டாட்டம்!

🔥 Views : 8
👁 Reading Now : 29
அணிச்சல் வெட்டும் நிகழ்வில் அன்னையர்களுடன் எம்.முருகன் (இடது) கண்ணன் (வலது)

உலகம் முழுவதும் கொண்டாடப்படும் மகளிர் தினம், 2025 மே 12ஆம் தேதி, மலேசியா சீரடி சாயி பாபா சாஸ்திர சபையினால் நாடு முழுவதும் உள்ள பாபா மையங்களில் ஆன்மிகமும் அன்பும் நிறைந்த முறையில் விமரிசையாக கொண்டாடப்பட்டது. அதேபோல் நாடறிந்த புகைப்பட நிருபர் எம்.முருகன் அவர்களின் பிறந்தானா விழாவும் விமரிசையாக கொண்டாடப்பட்டது.

இவ்வாண்டு Brickfields மற்றும் Lebuh Ampang பாபா மையங்களில் நடைபெற்ற பிரதான விழாவில், பெண்கள் மற்றும் இளையோர் குழுவினர் மாலை நேரத்தில் நிகழ்ச்சியை ஆன்மீக பரவசத்தில் தொடங்கும் வகையில் பஜனைகள் பாடினர்.

இந்த விழாவின் சிறப்பு அம்சங்களில் ஒன்று, ஒவ்வொரு மையத்திலும் 45 சேலைகள் வழங்கப்பட்டதுடன், பாபாவின் சக்தியை பிரதிபலிக்கும் வகையில் 9 கேக்குகள் வெட்டப்பட்டது. இந்த எண்ணிக்கைகள், பாபாவின் எண் 9 சக்தியை உருவகிப்பதைக் குறிக்கின்றன.

மேலும், பாபா அமைப்பிற்காக பெருமளவில் பங்களித்து வந்த தாய்மார்களுக்காக லக்கி ட்ரா நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டு, பல பரிசுகள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சிகளுக்கு பின்னர், அனைவருக்கும் ஏராளமான உணவுகள் வழங்கப்பட்டு, அனைவரும் திருப்தியுடன் மகிழ்ச்சியுடன் பங்கேற்றனர்.

இந்நிகழ்வுகள், பாபா பற்றிய அன்பையும், தாய்மார்களின் பங்களிப்பை மதிக்கும் இலட்சியத்தையும் வெளிப்படுத்தும் நிகழ்வாகும்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles