28.4 C
Kuala Lumpur
Friday, April 24, 2026

Vetri

அதிகமான இளைஞர்கள் ”யாசி”க்கு உறுப்பினர்கள் சேர வேண்டும் – டத்தோஸ்ரீ சரவணன்

யாசி விருந்து விழா வருகின்ற 31 மே செந்தூள் கன்வெக்சன் சென்டரில் மிக சிறப்பாக நடைபெற உள்ளது. இதன் பத்திரிக்கை சந்திப்பு ம இ கா நேதாஜி மட்டபத்தில் அண்மையில் நடைபெற்றது. இதற்கு சரவணன் தலைமையற்ற அவர் பேசும் போது மறைந்த துண் சாமி வேலுவினால் யாசி தோற்றுவிக்கப்பட்டது. இது கலைஞர்களுக்காக தோற்றுவிக்கப்பட்டது இதை தொடர்ந்து விடாமல் பாதுகாத்து வருவோம். இதில் இளைஞர்கள் அதிகமான பேர் உறுப்பினர்களாக சேர வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

மேலும் தமிழ்நாட்டுக் கலைஞர்களைப் போல நாமும் அவர்களுக்கு இணையாக திரைப்படத்துறையில் முன்னேறி வருகிறோம் என்பது பெருமையாக உள்ளது. சினிமாவும் சரி குறும்படமும் சரி பாடல்களும் சரி அனைத்திலும் மலேசியக் கலைஞர்கள் முன்னேறி வருகிறார்கள் நம் நாட்டு கலைஞர் டாக்கி தமிழ் திரைப்படத்தில் நடித்து பாடல் மூலம் மிகவும் பிரபலமான உள்ளார் அந்த திரைப்படத்தை தமிழகத்தில் பார்த்தேன் நம் கலைஞனை தமிழகத்தில் திரையில் பார்த்து அந்தப் பாடலுக்கு புலி புலி பாடலுக்கு அபிநயம் பிடிக்கும் போது எனக்கு பெருமையாக இருந்தது நம் கலைஞன் இங்கும் வளர்ந்து வருகிறான் என்று அதுபோல அனைத்து துறையிலும் உள்நாட்டு கலைஞர்களுக்கு நாம் முக்கியத்துவம் கொடுப்போம் இந்த விருது விழாவில் 48 விருதுகள் வழங்கப்படுகிறது அனைத்தும் நடுவர்களாலும் பொதுமக்களாலும் தேர்ந்தெடுக்கப்பட்டு முறையாக இந்தஇந்த விருதுகள் வழங்கப்படுகிறது

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles