
DMY நிறுவனத்தின் ஏற்பாட்டில் பிரம்மாண்டமாக Cheras, Kuala Lumpur அமைந்துள்ள MYTOWN Shopping Mall இல் Thug Life ”தக் லைவ்” திரைப்படத்தின் ரசிகர்களை சந்திக்கும் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. உலகநாயகன் கமல்ஹாசன், நடிகை திரிஷா கிருஷ்ணன், மற்றும் திரு சஞ்சய் அவர்கள் கலந்து கொண்டார்கள். படம் ஜூன் 5ஆம் தேதி மலேசியா முழுவதும் 100க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் ஒளியேரவுள்ளது. கவிமாறன் நிகழ்ச்சியை சிறப்பாக தொகுத்து வழங்கினார். இதன் பத்திரிக்கையாளர் சந்திப்பு சங்கிரிலா தங்கும் விடுதியில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

இதில் கலந்துகொண்டு உலக நாயகன் பத்திரிக்கையாளர்களை சந்தித்தார். மேலும் இந்த சந்திப்பை வெகு சிறப்பாக சுவையுடனும் அழகுடனும் உள்நாட்டு கலைஞரும் அறிவிப்பாளருமான கவிமாறன் வழி நடத்தினார். இந்த நிகழ்ச்சியை DMY நிறுவனம் மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தது
