24.7 C
Kuala Lumpur
Saturday, April 25, 2026

Vetri

பள்ளி மாணவர்களுக்கு இணைய பாதுகாப்பு திட்டம்

Made with LogoLicious Add Your Logo App

இணைய அச்சுறுத்தல் என்பது நாட்டில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. பெரியவர்கள் முதல் சிறுவர்கள் வரை இந்த இணைய அச்சுறுத்தலில் சிக்கி தவித்து வருகின்றனர். இப் பிரச்சினைக்கு தீர்வு காண பள்ளி மாணவர்களிடையே இணைய பாதுகாப்பு குறித்து முழு விழிப்புணர்வை பெற்றிருக்க வேண்டும்

மித்ராவின் பள்ளி மாணவர்களுக்கான இணைய பாதுகாப்பு திட்டம் 80,000 மாணவர்களை இலக்காக கொண்டுள்ளது.

மித்ரா சிறப்பு நடவடிக்கை குழுவின் தலைவர் ப. பிரபாகரன் இதனை கூறினார்.

.

Made with LogoLicious Add Your Logo App

இதன் அடிப்படையில் பள்ளி மாணவர்களுக்கான இணைய பாதுகாப்பு திட்டத்தை மித்ரா அறிமுகம் செய்துள்ளது.

இத் திட்டத்தின்கீழ் தமிழ்ப்பள்ளி, இடைநிலைப்பள்ளி என மொத்தம் 500 பள்ளிகளில் இத் திட்டம் மேற்கோள்ளப்படவுள்ளது. இதன் மூலம் நாடு முழுவதும் உள்ள 80,000 மாணவர்கள் பயன்பெற உள்ளனர்.

மலேசிய சைபர் செக்கியிரூட்டி, கல்வியமைச்சு ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் இத்திட்டம் மேற்கொள்ளப்படவுள்ளது.

Made with LogoLicious Add Your Logo App

இணைய பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு, இணைய அச்சுறுத்தல்கள், இணைய பகடிவதைகள் உட்பட அனைத்தும் மாணவர்களுக்கு போதிக்கப்படும். ஆக இத் திட்டம் மாணவர்களுக்கு பெரும் பயனாக இருக்கும்.

செந்தூல் தம்புசாமி பிள்ளை தமிழ்ப்பள்ளியில் நடந்த இத் திட்டத்தின் அறிமுக விழாவில் பேசிய பிரபாரன் இதனை கூறினார்.

பிரதமர் துறையின் கூட்டரசுப் பிரதேச அமைச்சர் டத்தோஸ்ரீ ஜலேஹா முஸ்தாபா இத் திட்டத்தை தொடக்கி வைத்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles