26.3 C
Kuala Lumpur
Monday, August 17, 2026

Vetri

டான்ஸ்ரீ ரெனா துரைசிங்கம், டத்தோ சகாதேவன் உட்பட திரளான மக்கள் டான்ஸ்ரீ தம்பி ராஜாவுக்கு இறுதி அஞ்சலி!

🔥 Views : 19
👁 Reading Now : 64

ஸ்ரீ முருகன் கல்வி நிலையத்தின் தோற்றுநர் டான்ஸ்ரீ டாக்டர் எம் தம்பிராஜா நல்லுடலுக்கு இன்று ஏராளமானோர் இறுதி அஞ்சலி செலுத்தினர்.

பெட்டாலிங் ஜெயா ஸ்ரீ முருகன் ஆசிரமத்தில் கிடத்தி வைக்கப்பட்டிருந்த அவரின் நல்லுடலுக்கு தலைவர்கள், முன்னாள் ஸ்ரீ முருகன் கல்வி நிலைய மாணவர்கள், அரசியல் பிரமுகர்கள், ஊடகவியலாளர் இறுதி அஞ்சலி செலுத்தியவர்களில் அடங்குவர்.

தேசிய நிலநிதி கூட்டுறவு கழகத்தின் தலைமை நிர்வாக இயக்குனர் டத்தோ பி.சகாதேவன், லோட்டஸ் குழுமத்தின் தலைமை நிர்வாக இயக்குனர் டான்ஸ்ரீ ரெனா துரைசிங்கம், டத்தோஸ்ரீ எஸ்.கே. தேவமணி, டான்ஸ்ரீ குமரன், சுங்கை பூலோ முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவராசா, பிரகாஷ் ராவ், கெப்போங் கெஅடிலான் உறுப்பினர் ஜெயகுமார், துவான் இராஜன், பிபிபி கட்சியின் தேசிய தலைவர் டத்தோ டாக்டர் லோகபாலா, சத்யா சுதாகரன் உட்பட பலரும் இறுதி அஞ்சலி செலுத்திய வேர்களில் அடங்குவர்.

நாடு ஒரு நல்ல மனிதரையும் சிறந்த கல்விமானையும் இழந்து விட்டதாக டான்ஸ்ரீ ரெனா துரைசிங்கம் தெரிவித்தார்.

தனது வாழ்நாள் முழுவதும் இந்திய சமுதாயத்திற்கு குறிப்பாக இந்திய மாணவர்களின் கல்விக்கு அரும்பாடு பட்டவர்.

இவரின் மறைவு இந்திய சமுதாயத்திற்கு பேரிழப்பு என்றும் அவர் சொன்னார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles