25.2 C
Kuala Lumpur
Tuesday, June 16, 2026

Vetri

🛕 கோலாலம்பூரில் புதிய கைலாசநாதர் ஆலயத்துக்காக நிதி திரட்டும் விழா – மக்கள் ஒத்துழைப்பு வேண்டப்படுகிறது!

🔥 Views : 6
👁 Reading Now : 64

அண்மையில் கோலாலம்பூரில் கைலாசநாதர் ஆலயம் கட்டுவதற்கான நிதி திரட்டும் விழா நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு மெட்ராஸ் காபி உணவகத்தில் ஒரு பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் ஆலய நிர்வாகக் குழுவினர் பங்கேற்றனர்.

அவர்கள் கூறுகையில்:

டாமன் சாரா டாமாய் பகுதியில் எந்தவொரு ஆலயமும் இல்லை. இப்பகுதியில் வசிக்கும் 500க்கும் மேற்பட்ட இந்திய குடும்பங்கள், தங்களின் ஆன்மீக தேவைகளுக்காக வெகு தூரம் செல்ல வேண்டிய சூழ்நிலையில் உள்ளனர்.”

“தற்போது அரசாங்கம் எங்களுக்கு முழு அதிகாரத்துடன் ஆலயம் கட்ட அனுமதி வழங்கியுள்ளது. எனவே, பல வழிகளில் நிதி திரட்டி, இந்த பகுதியை ஆன்மீகமாக ஒளிரச் செய்ய இந்த கைலாசநாதர் ஆலயத்தை கட்டும் முயற்சி மேற்கொண்டு வருகிறோம்.”

அவர்கள் மேலும் தெரிவித்ததாவது:

“இந்த ஆலயம், ஒரு ஆன்மீக தலமாக அமைந்து, மக்கள் சாமி வழிபாடுகளும், பூஜைகளும் செய்ய ஏதுவாக அமையும் என்பது உறுதி. இதற்காக விரைவில் ஒரு விருந்து நிகழ்ச்சி நடைபெற உள்ளது. நிகழ்வுக்கான டிக்கெட்டுகள் விற்பனைக்கு உள்ளது. அனைவரும் தங்களால் இயன்ற நிதியுதவியை செய்து, இந்த புனித பணியில் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.”

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles