31.9 C
Kuala Lumpur
Saturday, August 15, 2026

Vetri

📚 பள்ளி மாணவர்களின் வளர்ச்சிக்காக செந்தமிழ் விழா – டத்தோ சிவகுமார் நன்கொடை!

🔥 Views : 18
👁 Reading Now : 60

தேவஸ்தான அறங்காவலரும் மகிமா நிறுவனத்தின் தலைவருமான டத்தோ சிவகுமார், பள்ளி மாணவர்களின் வளர்ச்சி மற்றும் தமிழ் மொழிக்கான உற்சாகத்தை ஊக்குவிக்க மையமாக கொண்டு, செந்தமிழ் விழா நடத்தப்படுவதாக தெரிவித்தார்.

இந்த விழா, மாணவர்களுக்கு ஊக்கம் தரும் ஒரு அரிய வாய்ப்பு. மேலும் இது நல்ல கல்வி வளர்ச்சிக்கு வழிவகுக்கும். கல்வி அமைச்சகம் இதனை ஆதரிக்க வேண்டும்,” என்று அவர் வலியுறுத்தினார்.

அதேவேளையில், பத்துமலை தமிழ் பள்ளிக்கு இந்த விழா திட்டத்திற்காக RM 10,000 நன்கொடை வழங்கியதாக டத்தோ சிவகுமார் தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவித்ததாவது:

“எல்லோரும் இணைந்தால்தான் சமய வளர்ச்சி, சமுதாய முன்னேற்றம் சாத்தியமாகும். ஒவ்வொரு பிரச்சனைக்கும் கோவில்களையே குற்றமிடாமல், மதப் பிரச்சனை, விவாகரத்து உள்ளிட்ட சமூக சிக்கல்களுக்கு அனைவரும் ஒன்றிணைந்து செயலாற்ற வேண்டும். அப்போது மட்டுமே நம் சமுதாய வளர்ச்சி சாத்தியமாகும்.”

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles