
இந்து சங்க தேர்தல் ஞாயிற்றுக்கிழமை மிகச் சிறப்பாக நடைபெற உள்ளது இதில் நடப்பு தலைவராக தங்க கணேசன் முன்னாள் இந்து சங்கத்தின் தலைவர் தத்து மோகன் சான் இணைந்து போட்டியிடுகிறார்கள் இவரை எதிர்த்து துணைத்தலைவர் கணேஷ் பாபு தமத அணியுடன் களத்தில் இறங்குகிறார் அவர் கூறும் போது நாங்கள் பல தீர்மானங்களை நிறைவேற்றுவோம் தலைவர் தங்க கணேசனை நம்பி இந்து சங்கத்தை கொடுத்தோம் ஆனால் அதை சரிவர செய்யாமல் இந்துக்களுக்கு எந்தவித பலனும் செய்யாமல் இருந்து விட்டார் நான் நம்பியவரை இருக்கச் சொன்னேன் ஆனால் இன்று எந்தவித பலனும் இல்லை இப்பொழுது சண்டை போட்டுக் கொண்ட மோகன் சானுடன் இணைந்து போட்டியிடுகிறார்.

அதை பற்றி கவலை இல்லை எங்கள் அணி வெற்றி பெறும் நாங்கள் கோவில் பிரச்சனை பள்ளி பிரச்சனைகள் மற்ற பிரச்சனைகள் அனைத்தையும் தீர்வு காண நாங்கள் ஏற்பாடு செய்வோம் எங்களுக்கு கால அவகாசம் தேவை நாங்கள் உண்மையிலேயே இந்து சமயத்திற்காக நல்ல விஷயங்களை செய்ய வேண்டும் என்று களத்தில் இறங்கி உள்ளோம் எங்களுக்கு வெற்றி நிச்சயம் ஆண்டவன் துணை இருப்பார் என்றார்
