25.2 C
Kuala Lumpur
Tuesday, June 16, 2026

Vetri

மலேசிய இந்து சங்க தேர்தலில் தங்க கணேசன் அணி மகாத்தான வெற்றி!

🔥 Views : 6
👁 Reading Now : 42

நாடே மிகவும் அவலோடு எதிர்பார்த்த மலேசிய இந்து சங்கத் தேர்தலில் தங்க கணேசன் அணி மகத்தான வெற்றியை பெற்றுள்ளது.

இன்று பெட்டாலிங் ஜெயா தோட்ட மாளிகையில் மலேசிய இந்து சங்கத்தின் 48 ஆவது பேராளர் மாநாடு மற்றும் தேர்தல் நடைபெற்றது.

மொத்தம் 10 பேராளர்கள் பதவிக்கு இரு அணி சார்பில் 20 பேர் போட்டியிட்டனர்.

வெற்றி அணிக்கு தங்க கணேசன் தலைமை ஏற்ற வேளையில் மாறுவோம் மாற்றுவோம் அணிக்கு கணேஷ் பாபு தலைமை ஏற்றார்.

கடந்த இரண்டு வாரங்களாக பிரச்சாரம் அனல் பறந்தது.

இந்நிலையில் இன்று காலையில் 2,000க்கும் மேற்பட்ட பேராளர்கள் திரண்டு வந்து வாக்களித்தனர்.

ஆலயங்கள் சார்பில் வாக்களிக்க தனி கவுண்டர், பேராளர்கள் சார்பில் வாக்களிக்க தனி கவுண்டர் மற்றும் ஆயுள் கால உறுப்பினர்கள் வாக்களிக்க தனி கவுண்டர் ஏற்பாடு செய்யப்பட்டது.

மாலை நான்கு மணிக்கு மேல் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

நடப்பு தலைவர் தங்க கணேசன் 1,102 வாக்குகள் பெற்று முதல் நிலையில் வெற்றி பெற்றார்.

கோபி 1,091 வாக்குகள்,சுஜித்திரா 1,064 வாக்குகள், ஹரிதாசன் 1,064 வாக்குகள், சதீஷ் 1,041 வாக்குகள், ஏரா பெருமாள் 1,034 வாக்குகள் பெற்றனர்.

முனைவர் டாக்டர் முரளி 1,031 வாக்குகள், தினகரன் 1,031, கணேஷ் பாபு 1,028 வாக்குகள் மற்றும் டத்தோ மோகன் ஷான் 1,023 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றனர்.

வெற்றி கூட்டணி அணி சார்பில் மொத்தம் 8 பேர் வெற்றி பெற்ற வேளையில் மாறுவோம் மாற்றுவோம் அணி சார்பில் கணேஷ் பாபு மற்றும் டாக்டர் முரளிதரன் வெற்றி பெற்றனர்.

மொத்தம் 10 இடங்களில் 8 இடங்களில் தங்க கணேசன் அணியினர் வெற்றி பெற்றுள்ளது மிகப்பெரிய சாதனை என்று வர்ணிக்கப்படுகிறது.

கடுமையான போட்டிக்கிடையே தங்க கணேசன் அணி வெற்றி பெற்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles