31.3 C
Kuala Lumpur
Friday, June 5, 2026

Vetri

5 லட்சம் தடுப்பூசிகளை வாங்க சிலாங்கூர் அரசு முயற்சி!

🔥 Views : 8
👁 Reading Now : 46

சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள மக்களுக்கு தடுப்பூசியை போடுவதற்கு ஐந்து லட்சம் தடுப்பூசிகளை வாங்குவதற்கு சிலாங்கூர் மாநில அரசாங்கம் மேற்கொண்டு வரும் முயற்சிக்கு அமோக வரவேற்பு கிடைத்துள்ளது.
தடுப்பூசியை சொந்தமாக வாங்கும் மாநில அரசின் திட்டம் மாநிலத்தில் தடுப்பூசி செலுத்தும் இயக்கத்தை விரைவுபடுத்த பெரிதும் துணை புரியும் என்று மலேசிய மருத்துவர்கள் சங்க தலைவர் டத்தோ எம்.சுப்பிரமணியம் கூறினார்
மூத்த குடிமக்கள், தொழில்துறை, உற்பத்தித் துறை மற்றும் சேவைத் துறையைச் சேர்ந்த பணியாளர்கள், இளைஞர்கள் இத்திட்டத்தின் மூலம் பயன் பெறுவார்கள்.
இத்திட்டத்தின் வெற்றியைக் காண நாங்கள் ஆவலுடன் காத்திருக்கிறோம். மேலும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தனியார் மருத்துவர்களை இந்த தடுப்பூசி செலுத்தும் திட்டத்தில் இணைத்த து மக்கள் தடுப்பூசியை விரைந்து பெறுவதை உறுதி செய்வதற்கான சரியான முடிவாகும் என்று அவர் கூறினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles