
வருகின்ற நவம்பர் 8ஆம் தேதி (சனிக்கிழமை) கோலாலம்பூர், ஸ்ரீ டமஸாராவில் அமைந்துள்ள RTA மண்டபத்தில் “பிரதர்ஸ் ஷேரிட்டி கிளப்” ஏற்பாட்டில் சிறப்பு ஒன்றுகூடல் விருந்து & நற்பணி நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
இந்த அமைப்பின் தலைவர் சீராளன் பழனிச்சாமி, அண்மையில் நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசும்போது:
- 2015 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட பிரதர்ஸ் ஷேரிட்டி கிளப், இன்று வரை பல்வேறு சமூக சேவைகளை தொடர்ந்து செய்து வருகிறது.
- ஆதரவற்றோர் இல்லங்கள், முதியோர் இல்லங்கள் மற்றும் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு தொடர்ந்து உதவி செய்து வருகிறோம்.
- இந்த நிகழ்ச்சி சமூக நலனுக்காகவும், பலரின் வாழ்க்கையை முன்னேற்றவும் நடத்தப்படுவதாகவும் தெரிவித்தார்.
அவரது வேண்டுகோள்:
“இந்த விருந்து & நற்பணி நிகழ்ச்சிக்கு அனைவரும் கலந்து கொண்டு, சமூக நலத்திற்கான எங்கள் முயற்சிகளுக்கு உறுதியான ஆதரவளிக்க வேண்டும்” எனக் கேட்டுக் கொண்டார். இந்த பத்திரிகையாளர் சந்திப்பில் நாடறிந்த அறிவிப்பாளர் கவிமாறன் கலந்து சிறப்பித்தார்.
