26.6 C
Kuala Lumpur
Thursday, August 13, 2026

Vetri

பிரிக்பீல்ட்ஸ் லிட்டில் இந்தியா தீபாவளி சந்தை கடைகளைஎங்களுக்கு கொடுங்கள்! கடைக்காரர்கள் கோரிக்கை

🔥 Views : 33
👁 Reading Now : 30

பிரிக்பீல்ட்ஸ் லிட்டில் இந்தியாவில் தீபாவளிக்கு காலம் தொட்டு வியாபாரம் செய்து வருகிறோம்.

வரும் அக்டோபர் 20 ஆம் தேதி கொண்டாடப்படும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பிரிக்பீல்ட்ஸ் லிட்டில் இந்தியாவில் சிறுதொழில் வியாபாரிகள் வியாபாரம் செய்ய கோலாலம்பூர் மாநகர் மன்றம் லைசென்ஸ் வழங்கும்.

அந்த வகையில் இந்த ஆண்டு காலம் காலமாக வியாபாரம் செய்யும் 40 பேரில் 11 பேருக்கு மட்டுமே வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

பெரும்பாலான வியாபாரிகள் மீண்டும் வியாபாரம் செய்ய லைசென்ஸ் வழங்கப்படவில்லை.

இது எங்களுக்கு பெருத்த ஏமாற்றத்தையும் வேதனையும் அளிக்கிறது என்று தம்பு என்ற குணா தெரிவித்தார்.

கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக நாங்கள் வியாபாரம் செய்து வருகிறோம்.

இது எங்கள் வாழ்வாதாரம். ஆனால் திடீரென்று எங்களை புறக்கணித்து கடைகளை மற்றவர்களுக்கு கொடுத்தது ஏன் என்று இந்திய தொழில் வியாபாரிகள் கேள்வியை எழுப்பினர்.

கூட்டரசு பிரதேச அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் சலேஹா இந்த விவகாரத்தில் தலையிட்டு எங்களுக்கு நல்ல தீர்வு காண முன் வர வேண்டும் என்று அவர்கள் கேட்டுக் கொண்டனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles